மேலும் அறிய

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 38 கிராமங்களுக்கு புது விதிமுறை - முழு விவரம் உள்ளே!

Vedanthangal & Karikili Bird Sanctuary: வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி பறவைகள் சரணாலயங்களுக்கு மத்திய அரசு எல்லை வரையறை செய்து ‘ராம்சார்’ அங்கீகாரக் குறியீட்டை வழங்கியுள்ளது.

Ramsar Site Tamil Nadu: செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி பறவைகள் சரணாலயங்களுக்கு மத்திய அரசு எல்லை வரையறை செய்து ‘ராம்சார்’ அங்கீகாரக் குறியீட்டை வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்தச் சரணாலயங்களைச் சுற்றி வான் வழியாக 5 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள கிராமங்களின் எல்லைப் பட்டியலை வனத்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 1936-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 16 அடி நீர்ப்பிடிப்பு கொண்ட வேடந்தாங்கல் ஏரியும், 1989-ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட கரிக்கிலி ஏரியும் தமிழகத்தின் முக்கியமான பாதுகாக்கப்பட்ட ஈரநிலப் பகுதிகளாகத் திகழ்கின்றன.

பறவைகளின் வருகையும் சூழலியலும்

பர்மா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பாம்பாட்டி தாரா, சாம்பல் நாரை, நீர்க்காகம், கூழைக்கடா உட்பட 30-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் ஆண்டுதோறும் இங்கு வந்து தங்குகின்றன. வழக்கமாக செப்டம்பர் மாத இறுதியில் வெளிநாட்டுப் பறவைகளின் வருகை தொடங்கி, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உச்சத்தை அடைகிறது. மே மாதத்திற்குப் பிறகு பறவைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கும். கரிக்கிலி ஏரியில் நீர்க்கடம்ப மரங்கள் அதிகம் இருப்பதால், இங்குப் பறவைகளின் வருகை மேலும் அதிகரித்துள்ளது.

கட்டுப்பாடுகளும் வளர்ச்சி திட்டங்களும்

சரணாலயத்தின் வான்வழி 5 கி.மீ. சுற்றளவில் உள்ள பாதுகாக்கப்பட்ட கிராமங்களில் புதிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் அனுமதி பெற்ற பின்னரே கட்டுமான பணிகளையோ, வீடுகளுக்கான மனைப் பிரிவுகள் வாங்குவதையோ பொதுமக்கள் செய்ய வேண்டும். மேலும், அப்பகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை வனத்துறையின் அனுமதியின்றி தூர்வாரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச்சரணாலயங்களை மேம்படுத்திச் சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு உணவகங்கள் மற்றும் சிறு கடைகள் வழியாக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. அத்துடன் பெண்கள் மேம்பாட்டிற்கு வங்கி கடன் உதவிகளும் வழங்கப்பட உள்ளன. அதேவேளையில், கரிக்கிலி பகுதியில் தொழிற்சாலைகள் இல்லாததால் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களுக்குக் குடிநீர், வடிகால் போன்ற அடிப்படை வசதிகளை வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு அரசு அமைத்துத் தர வேண்டும் என்பதே உள்ளூர் மக்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

TNEB: குஷியில் துள்ளிக்குதிக்கும் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள்! இனி பதவி உயர்வு.. சம்பளம் எகிற போகுது!
TNEB: குஷியில் துள்ளிக்குதிக்கும் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள்! இனி பதவி உயர்வு.. சம்பளம் எகிற போகுது!
தமிழகத்தில் இன்று மீண்டும் மழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வானிலை அப்டேட்!
தமிழகத்தில் இன்று மீண்டும் மழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வானிலை அப்டேட்!
TN Weather News: மீண்டும் வேகமெடுக்கும் பருவமழை..! இன்று எந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மீண்டும் வேகமெடுக்கும் பருவமழை..! இன்று எந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-இல் தொடக்கம் - முழு விவரம் தெரியுமா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh Kavya: ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
ஊரே கூடிய அனிருத் - காவ்யா வரவேற்பு விழா..! வராத அந்த 3 பேர் - என்ன ஆச்சு? அழைப்பு இல்லையா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் பெஸ்ட் டைம்! இன்றைய நிலவரம் என்ன? இதோ அப்டேட்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் பெஸ்ட் டைம்! இன்றைய நிலவரம் என்ன? இதோ அப்டேட்!
SP Velumani: கட்சி இப்படி போனதுக்கு காரணமே நீங்கதான்! யாரு சொல்வதையும் கேக்குறது இல்ல! ஆதங்கத்தை கொட்டிய எஸ்.பி. வேலுமணி!
SP Velumani: கட்சி இப்படி போனதுக்கு காரணமே நீங்கதான்! யாரு சொல்வதையும் கேக்குறது இல்ல! ஆதங்கத்தை கொட்டிய எஸ்.பி. வேலுமணி!
TN Weather News: மீண்டும் வேகமெடுக்கும் பருவமழை..! இன்று எந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
மீண்டும் வேகமெடுக்கும் பருவமழை..! இன்று எந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Crime: ”மத்த பசங்க கூடலாம் ஏன் பேசுற” 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - 23 வயது காதலன் ஆவேசம்
”மத்த பசங்க கூடலாம் ஏன் பேசுற” 11ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - 23 வயது காதலன் ஆவேசம்
XEV 9e Sporteq: மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
மின்சார 5 சீட்டரில் புது சீரிஸை இறக்கும் மஹிந்த்ரா..! ரேஞ்ச், விலை, அம்சங்கள் எப்படி? அப்க்ரேட் என்ன?
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
MK Stalin: காலியான கொளத்தூர்.. மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? மாட்டாரா? ஓர் அலசல்
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
CM Vijay: மு.க.ஸ்டாலின் வீட்டு விசேஷத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்! ரஜினியுடன் சந்திப்பு!
Embed widget