மேலும் அறிய
கடலூர் : 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்
12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்ட மையங்களில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் .28 நாட்கள் இடைவெளிக்கு பிறகு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும்

சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
கடலூரில் 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்பட்டது, 76 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வர தொடங்கி உள்ளன. இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட தொடங்கி ஏற தாழ அனைத்து மாநிலங்களிலும் 18 வயது பூர்த்தி ஆனவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டன. பின்னர் அதனை தொடர்ந்து இந்தியாவில் 18-வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 சதவீதம் பேருக்கு ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பின் வீரியம் குறைவாக இருப்பதற்கு தடுப்பூசியே முக்கிய காரணியாக உள்ளதாக சுகாதார நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். இதனால், தடுப்பூசி செலுத்தும் பணியில் மத்திய மாநில அரசுகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் 12 முதல் 14 வயது வரம்பில் உள்ள சிறார்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

அதன் அடிப்படையில் கடலூர் மாநகராட்சியில் இதற்கு முன்னதாகவே 18 வயதிற்கு மேல் உள்ள மாணவர்களுக்கு பள்ளியிலேயே சென்று தடுப்பூசி செலுத்தியது போல் , இந்த முறையும் கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள 12 வயது முதல் 14 வயது உள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதனை கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தனர். இந்த தடுப்பூசி போடும் பணியில் கடலூர் மாவட்டத்தில் 76 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடுப்பூசி செலுத்துவதற்கு 2010 ஆம் ஆண்டு பிறந்த சிறுவர்கள், தடுப்பூசி போடும் நாளில் 12 வயதை எட்டியிருக்க வேண்டும் என்றும், ஒருவேளை 12 வயதை எட்டி இருக்கவில்லை என்றால் முன் பதிவு செய்து இருந்தாலும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்ட மையங்களில் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் எனவும், முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு 28 நாட்கள் இடைவெளிக்கு பிறகு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்





















