மேலும் அறிய

“வாயால் வடை சுடும் விஜய், பம்மி நிற்கும் டம்மி அரசு” - RTI தகவல் மறுப்பு.. உதயநிதியின் காட்டமான கேள்விகள்

உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது என்பதை உணர்ந்து இந்த Dummy அரசு தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்

தகவல் சரிபார்ப்பகம் குறித்த தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்காததற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பாதவது:

தகவல் சரிபார்ப்பகம் குறித்த தகவல்கள், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று இந்த டம்மி அரசு பம்மி நிற்பதை வன்மையாக கண்டிக்கிறேன். பொய்ச்செய்திகளுக்கு எதிராக போரிட, கழக ஆட்சியின்போது தகவல் சரிபார்ப்பு தொடர்பான சர்வதேச அளவிலான நிறுவனங்களில் பங்களிப்புச் செய்த அனுபவம் கொண்டவர்களைக் கொண்டு TN Fact Check Unit தொடங்கப்பட்டது.

 

அதனை இன்றைய சர்க்கஸ் சர்க்கார், Virtual Abusers - கும்பலைக் கொண்டு Information Integrity Desk என்று மாற்றி இருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை எங்கே? இதில் யார் யாரெல்லாம் பொறுப்பில் உள்ளார்கள்? என்னென்ன பணிகளை செய்கிறார்கள் ? இதற்கான நிதி ஒதுக்கீடு என்ன? என்ற கேள்விகளை எல்லாம் RTI மூலம் ஜீவிதா என்பவர் கேட்டுள்ளார்.

ஆனால், அவர் RTI மூலம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என்று இந்த அரசு கடிதம் கொடுத்துள்ளது. 
Transparent Governance-ஐ தருவேன் என்று வாயால் வடை சுட்ட முதலமைச்சர், தன்னுடைய Advisors நியமனம் முதல், தகவல் சரிபார்ப்பக பொறுப்பாளர்கள் தேர்வு வரை எல்லா GO-வையும் ஒளித்து வைப்பது ஏன்?

ரசிகர்கள் என்ற போர்வையில் பொய்களைப் பரப்பி -  ஆபாச தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த தகுதியற்ற இணையக் கூலிப்படைக்கு அந்தப்பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகிவிடும் என்பதாலா? 
உண்மை எது - பொய் எது என்று சொல்லும் தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களே மக்களுக்குத் தெரியாமல் இருப்பது நல்லதல்ல. உண்மையை நீண்ட நாள் பொத்தி வைக்க முடியாது என்பதை உணர்ந்து இந்த Dummy அரசு தகவல் சரிபார்ப்பகம் பற்றிய தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை மாநகராட்சியில் சுவரொட்டிக்கு முழு தடை: அச்சகங்கள் மீதும் கடும் நடவடிக்கை!
மதுரை மாநகராட்சியில் சுவரொட்டிக்கு முழு தடை: அச்சகங்கள் மீதும் கடும் நடவடிக்கை!
விருதுநகரில் அண்ணா மிதிவண்டி, மாரத்தான்: பங்கேற்று பரிசுகளை வெல்ல அரிய வாய்ப்பு!
விருதுநகரில் அண்ணா மிதிவண்டி, மாரத்தான்: பங்கேற்று பரிசுகளை வெல்ல அரிய வாய்ப்பு!
"திருமண ஆசை - வீட்டில் யாரும் இல்லை" பிளஸ்-2 மாணவி கர்ப்பம் - இன்ஜினியரிங் மாணவர் கைது
மதுரை மாணவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகையுடன் தொழிற்பழகுநர் முகாம்!
மதுரை மாணவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகையுடன் தொழிற்பழகுநர் முகாம்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone: அர்னாப், முரசுவை தொடர்ந்து அடுத்த புயல்? என்ன பெயர் தெரியுமா? தமிழகத்துக்கு டேஞ்சர்?
Cyclone: அர்னாப், முரசுவை தொடர்ந்து அடுத்த புயல்? என்ன பெயர் தெரியுமா? தமிழகத்துக்கு டேஞ்சர்?
ஜாக்பாட் ஆபர்! அயல்நாடுகளில் ரூ.1,25,000 ஊதியத்தில் வேலை வழங்கும் தமிழக அரசு! - என்ன தகுதி தெரியுமா?
ஜாக்பாட் ஆபர்! அயல்நாடுகளில் ரூ.1,25,000 ஊதியத்தில் வேலை வழங்கும் தமிழக அரசு! - என்ன தகுதி தெரியுமா?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?
ரூ.5,199-க்கு நோக்கியா ஃபிளிப் போன்! இரண்டு டிஸ்பிளே, SOS பட்டன்... என்னென்ன வசதிகள்?
Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?
Sterlite: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்! எவ்வளவு தெரியுமா?
"பாக்ஸ் ஆபீஸை வேட்டையாட வரும் விஜய் படம்” - 2027 ஜனவரி 1-ல் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் - என்ன படம் தெரியுமா?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (12-11-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
No-Confidence Motion : ’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ எதிர்க்கட்சிகள் கொண்டு வர முடியுமா? என்ன நடக்கும் ?
’விஜய் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்’ என்ன நடக்கும் ?
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
சென்னையில் மழை பெய்யுமா? பெய்யாதா? - வானிலை மையத்தின் 7 நாள் மேஜர் அப்டேட்!
Embed widget