திருவண்ணாமலை: ட்ரோன் கேமிராவில் சிக்கிய இளைஞர்கள் : வாலிபால் விளையாடியவர்களை வசமாகப் பிடித்த போலீஸ்
திருவண்ணாமலையில் மாவட்ட காவல்துறை சார்பில் ட்ரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணித்து நுழைந்த போலீஸை பார்த்ததும், விளையாடிக்கொண்டு இருந்த இளைஞர்கள் காம்பவுண்ட் எகிறிக் குதித்து சிதறி ஓடினர்.
கொரோனா தோற்று இரண்டாம் அலை தமிழகம் முழுவதும் அதிகரித்துவந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்திருந்தது அப்படி இருந்தும் அத்தியாவசிய பொருட்களை வாங்க பெரும்பாலான இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து இருந்த நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், திருவண்ணாமலையில் மாவட்ட காவல்துறை சார்பில் ட்ரோன் கேமரா (helicam)மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க இன்று திருவண்ணாமலை நகரின் பல பகுதிகளில் சன்னதி தெரு, மத்திய பேருந்து நிலையம், கிரிவலப்பாதை, சென்னை ரோடு, மற்றும் நகரின் முக்கிய வீதிகள், குறுகிய சந்துகள், பள்ளி மைதானங்கள், ஆகிய பகுதிகளில் பறக்கும் கேமிரா மூலம் வீடியோ எடுக்கப்பட்டது.
அப்போது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இளைஞர்கள் வாலிபால் விளையாடிக்கொண்டு இருப்பதும், மேலும் 30-க்கும் மேற்பட்ட முதியோர்கள் நடைபயணம் மேற்கொண்டு இருப்பதும் கேமிராவில் காண்பிக்கவே, போலீசார் மைதானத்திற்கு உள்ளே செல்வதற்குள் வீடியோ எடுப்பதை பார்த்த இளைஞர்கள் நான்குபுறமும் சிதறி காம்போவண்ட் சுவரின் மீது எகிறிக்குதித்து ஓடினர். மேலும் மைதானத்தில் நடைபயணம் மேற்கொண்டவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், கொரோனா தொற்று பரவலின் நிலையைக் குறித்து எடுத்துக் கூறி அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் யாரும் வரவேண்டாம் என்று அறிவுரை வழங்கியும் கண்டித்தும் அனுப்பினர்.
மேலும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு அபராதம் விதித்தனர். அதேபோன்று தேவையின்றி வெளியே சுற்றியவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். அவர்களின் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து பேட்டியளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1900 காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர்,போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுளவருவதாகவும்,மாவட்டம் முழுவதும் 16 நிரந்தர சோதனை சாவடிகள் மற்றும் மாவட்டம் முழுவதிலும் 26 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொது மக்கள் நடமாட்டம் மற்றும் வருவாய் துறையினருடன் இணைந்து வணிக நிறுவனங்களின் விதிமீறல்கள் ஆகியவை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும்,குறி;ப்பாக 3 கட்ட பாதுகாப்பை ஏற்படுத்தி ஊரடங்கை தீவிரமாக நடைமுறை செய்து வருவதாகவும்
,இது வரை 1000க்கும் மேற்பட்ட விதிமீறி வணிக நிறுவனங்களுக்கு அபராதம்,கடைகளை மூடி சீல் வைத்தல் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள் தெரிவித்தார்.