TVK Vijay: தவெக பொதுக்குழு.. பார்த்துப் பார்த்து 17 தீர்மானங்கள்.. வாக்கு வாங்க ஒர்க்அவுட் ஆகுமா.?
இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், மக்களை கவரும் வகையில் பார்த்துப் பார்த்து 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

சென்னை திருவான்மியூரில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டத்தில், விஜய் தனது அடுத்த கட்ட அரசியல் பயணம் குறித்து அறிவிக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படும் நிலையில், கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த தீர்மானங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
பார்த்துப் பார்த்து 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 17 தீர்மானங்கள் இவைதான்.
- இஸ்லாமியர்களின் உரிமையை பறிக்கும் வக்பு சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
- மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்.
- பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது.
- தமிழ்நாட்டிற்கு எப்போதும் இருமொழிக் கொள்கை தான் என்பதில் தமிழக வெற்றிக் கழகம் உறுதி.
- நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு தேவை இல்லை என தீர்மானம்.
- மாநில அரசுகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்.
- பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என தீர்மானம்.
- சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு காரணமான திமுக அரசுக்கு கண்டனம்.
- டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழல் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- சமூக நீதியை நிலைநிறுத்த சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்.
- இலங்கை தமிழர் பிரச்னைக்கு பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு என தீர்மானம் நிறைவேற்றம்.
- கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட உள்ள பன்னாட்டு அரங்கிற்கு தந்தை பெரியார் பெயரை சூட்ட வேண்டும்.
- கொள்கை தலைவர்கள் வழியில் பயணிப்போம்.
- தமிழக வெற்றிக் கழகத்தில், அனைத்து முடிவுகளையும் எடுக்க தலைவருக்கே முழு அதிகாரம்.
- தவெகவின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
- தமிழக வெற்றிக் கழகத்திற்காக அயராது பாடுபட்டு மறைந்த செயல்வீரர்களுக்கு இரங்கல்.
இந்த தீர்மானங்களை பார்க்கும் போது, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தரப்பினரின் வாக்குகளை யும் பெறும் வகையில், பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது. விஜய்யின் கணக்கு ஒர்க்அவுட் ஆகுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

