Fact Check: என்னாது.. முதல்வர் ஸ்டாலினுக்கு ஆப்பிரிக்க பழங்குடியினர் வாழ்த்து கூறலையா? உண்மை என்ன?
இந்த காணொளியானது வாழ்த்து விளம்பரத்துக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

முதலமைச்சருக்கு ஆப்பிரிக்க பழங்குடியினர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று தனியார் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சருக்கு பழங்குடியினர் வாழ்த்து
முன்னதாக தனியார் தொலைக்காட்சியின் எக்ஸ் தளத்தில், ’’பழங்குடி இன மக்களுக்கு தமிழ்நாடு அரசு செய்து வரும் திட்டங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றான தான்சானியாவில் வசிக்கும் பழங்குடி இன மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தை வைத்து பாரம்பரிய நடனம் ஆடி வாழ்த்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரல். அங்கு சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சுகுமார் என்ற தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர் மூலம் பழங்குடியினருக்கு தமிழ்நாடு அரசு செய்துவரும் திட்டங்கள் குறித்து அவர்களுக்கு தெரியவந்துள்ளது’’ என்று பதிவிடப்பட்டு இருந்தது.
எனினும் இதுகுறித்து தனியார் தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’தனியார் தொலைக்காட்சி வலைதளத்தில் தான்சானியா பழங்குடியினர் தங்களது பாரம்பரிய முறையில் ஆடிப் பாடி முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து கூறியதாக காணொளி ஒன்று பதிவேற்றப்பட்டது.
தேர்ந்தெடுக்கும் குழுவின் மூலமாக வாழ்த்து
இதன் உண்மைத்தன்மையை நமது facts and perspectives சார்பாக ஆராய்ந்தோம். அப்போது, அதில் நடித்துள்ளவர்கள் http://africanjoyflix.com, http://wishesmadevisual.com, http://africanbirthdaywishes.com, http://wishfromafrica.net போன்ற வலைதளங்கள் மூலமாக யாருக்கு வாழ்த்து சொல்ல விரும்புகிறோமோ அவர்களின் புகைப்படம் மற்றும் அவரை பற்றிய தகவல்களை கொடுப்பதன் மூலம் அந்த வலைதளத்தில் உள்ள நாம் தேர்ந்தெடுக்கும் குழுவின் மூலமாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளலாம். இதற்கு அந்தக்குழு 33 முதல் 40 டாலர் வரை சேவைக் கட்டணமாக வசூலிக்கிறது.
முதலமைச்சருக்கு ஆப்பிரிக்க பழங்குடியினர் வாழ்த்து! என்ற தலைப்பில் @Kalaignarnews X வலைதளத்தில் தான்சானியா பழங்குடியினர் தங்களது பாரம்பரிய முறையில் ஆடிப் பாடி முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து கூறியதாக காணொளி ஒன்று பதிவேற்றப்பட்டது.
— Facts & Perspectives (@FactCheck_TN) June 17, 2025
இதன் உண்மைத்தன்மையை நமது facts and… https://t.co/tBXlWG25K2
மருத்துவர் சுகுமார் என்பவர் தான்சானியாவில் மக்களுக்கு சேவை செய்கிறார். அதற்கு திமுக அரசு திட்டங்கள் மூலம் உதவுகிறது, அதை அறிந்த மக்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறியிருப்பதாக சொல்லப்படுவதற்கு செய்திகளோ, ஆதாரமோ அது பற்றிய தகவலோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த காணொளியானது வாழ்த்து விளம்பரத்துக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






















