மேலும் அறிய
தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் சென்ற வேன்கள் விபத்து; இருவர் பரிதாபமாக உயிரிழப்பு
தனுஷ்கோடியில் சுற்றுலாவுக்குச் சென்ற பயணிகள் வேன் அரசுப் பேருந்தினை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த வேனின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து
தனுஷ்கோடியில் சுற்றுலாவுக்குச் சென்ற பயணிகள் வேன் அரசுப் பேருந்தினை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த வேனின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் படுகாயம் அடைந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோதண்டராம் கோவில் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் வேனில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















