மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளூர் முதல் உலகம் வரையிலான நிகழ்வுகள்.. உடனே அறிய.. காலை 7 மணி தலைப்புச்செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் இன்று தொடக்கம் - காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- நிபா வைரஸ் பரவலை தடுக்க 6 மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- இந்தியை தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்த வேண்டும் என அமைச்சர் உதயநிதி வலியுறுத்தல்
- சனாதன எதிர்ப்பு கருத்தரங்கில் கலந்துகொள்வது குறித்து மாணவர்களுக்கு சுற்றறிக்கை - எதிர்ப்பால் திரும்ப பெறப்படுவதாக அறிவித்த திருவாரூர் அரசு கல்லூரி
- மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,000 முன்கூட்டியே வழங்கப்பட்டதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி - விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் உரிய தகவல்களோடு மீண்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
- இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி - நோய் தடுப்பு நடவடிக்கையில் திவீரமாக களமிறங்கிய தமிழ்நாடு அரசு
- வார விடுமுறை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு
- ஆவினில் நெய் மற்றும் வெண்ணெய் பொருட்கள் விலை உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி
- திருவள்ளுவரை பற்றியும் அம்பேத்கரை பற்றியும் இழிவாக பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியன் கைது
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகள் நடப்படும் என பனைதொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவரும், சமத்துவ மக்கள் கழக தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தகவல்
இந்தியா:
- திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- சந்திரபாபு நாயுடுவுடன் பவன் கல்யாண் சந்திப்பு - நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் ஜனசேனா கட்சி கூட்டணி அமைப்பதாக அறிவிப்பு
- ரயில் பயணிகளை விருந்தினர்களை போல நடத்துமாறு ஊழியர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி அறிவுறுத்தல்
- காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு புதிய பதவி - உள்நாட்டு பாதுகாப்பு ஐ.ஜி. ஆக நியமனம்
- கேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ் தாக்குதல் - தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது மாநில அரசு
- சனாதன தர்மத்தை ஒழித்துக்கட்ட I.N.D.I.A கூட்டணி விரும்புகிறது என பிரதமர் மோடி குற்றச்சாட்டு
உலகம்:
- சீனா உதவியுடன் மனிதர்களை நிலவுக்கு அனுப்பு வெனிசுலா நாடு திட்டமிட்டுள்ளதாக தகவல்
- சீன சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டுக்கு வர விசா தேவையில்லை - தாய்லாந்து அறிவிப்பு
- மாண்டெனெக்ரோ நாட்டில் ‘சோம்பேறி குடிமகன்’ என்ற பெயரில் நடைபெறும் விநோத போட்டி
- லிபியாவில் டேனியல் புயலால் பேரழிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது
- சீனாவில் ராட்சத கிரேன் விழுந்து 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு
விளையாட்டு:
- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - வங்கதேசம் அணிகள் இன்று மோதல்க
- ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை அணி
- ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது
- நியூசிலாந்து - இங்கிலாந்து இடையேயான 4வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion