Red Alert: அதிகனமழை அபாயம்.. 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - உங்க ஊருக்கும் இருக்கா?
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளையும் 4 மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமைழ தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:
இந்த சூழலில், தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 20 செ.மீட்டர் மழைக்கு அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என்று கருதப்படுகிறது.
சென்னையில் எப்படி?
சென்னையைப் பொறுத்த மட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, சென்னைக்கு இன்று மற்றும் நாளை ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட் யாருக்கு?
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாவட்டங்களை ஒட்டியுள்ள உள்மாவட்டங்களான தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதிகனமழைக்கு வாய்ப்பு:
தற்போது வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவெடுத்துள்ளது. இது நாளை பிற்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் வட தமிழகத்தில் நெருங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது கரையை நெருங்கும் நேரத்தில் மேலும் வலுவடையும் என்று கூறப்படுகிறது. இதனால், இதன் தாக்கத்தால் தமிழ்நாட்டில் மிக கனமழையும், அதிகனமழையும் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை எப்படி?
தமிழ்நாட்டில் இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, நாளை தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாளான 23ம் தேதி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





















