TN local body Elections 2022: தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நிறைவு... வெளியூர் ஆட்கள் உடனே வெளியேற உத்தரவு!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு பெற்றுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் பதவிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றுள்ளது. இன்று மாலை முதல் சம்பந்தப் பட்ட வார்டுகளில் தேவையில்லாத நபர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான தேர்தல் தேதிகள்:
வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள்- 28- 01-2022
வேட்புமனு தாக்கல் இறுதி நாள் - 4-02-2022
வேட்பு மனுக்கள் பரிசீலனை - 05-02-2022
வேட்பு மனு திரும்ப பெருவதற்கான கடைசி தேதி - 07 -02-2022
வாக்கு பதிவு நடைபெறும் தேதி - 19 - 02 -2022
வாக்கு எண்ணிக்கை - 22-02-2022
வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதில் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: 'சொல்றீங்க, செஞ்சீங்களா? கோவை மாவட்ட மக்களை நம்பவே மாட்டேன்' - உதயநிதி ஸ்டாலின்