மேலும் அறிய

RS 1000 Scholarship: கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை... விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மூவலூர்‌ ராமாமிர்தம்‌ அம்மையார்‌ உயர்கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதாமாதம் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கப்பட உள்ளது. 

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். 

தமிழ்நாட்டின் முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஏற்கனவே இருந்த தாலிக்கு தங்கம் எனும் திட்டத்தினை பெண் குழந்தைகளின் உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்கும் திட்டமாக மாற்றினார். இது பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றது.

அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மூவலூர்‌ ராமாமிர்தம்‌ அம்மையார்‌ உயர்கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதாமாதம் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கப்பட உள்ளது.  அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதேபோல் தொழில்நுட்பக்‌ கல்வி, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்வி இளநிலை பயிலும் மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தினை செயல்படுத்த ஏதுவாக, https://penkalvi.tn.gov.in/ என்ற முகவரியில்‌ இணைய தளம்‌ தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாணவிகள் பதிவு செய்து உள் நுழையலாம். முன்னதாக இணைய தளத்தில்‌, இத்திட்டத்தில்‌ பயன்பெறும்‌ மாணவியர்களின்‌ விவரங்களை 25.06.2022 முதல்‌ 30.06.2022க்குள்‌ சிறப்பு முகாம்கள்‌ ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக அந்த இணையதளத்தில்‌ பதிவிடப்பட வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.இத்திட்டத்திற்கென இளநிலை பயிலும்‌ மாணவியரிடமிருந்து அவர்களது சுய விவரங்கள்‌, வங்கிக்‌ கணக்கு விவரங்கள்‌ மற்றும்‌ பயின்ற அரசு பள்ளி விவரங்கள்‌ பெறப்பட்டு வந்தன.

இதனிடையே மாணவிகள் வேண்டுகோளை ஏற்று உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாணவிகள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யக் கால அவகாசம் ஜூலை 10 ஆம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டது. அதன்படி இன்று விண்ணப்பங்களை தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதுவரை இந்த திட்டத்தில்  2.8 லட்சம் மாணவிகள் விண்ணப்பத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மாணவிகள்‌ எந்தெந்த ஆவண நகல்களைக் கொண்டுவர வேண்டும்?

1. ஆதார்‌ நகல்‌,
2. வங்கி கணக்குப் புத்தக நகல்‌,
3. பத்து மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ பட்டியல்‌ நகல்‌,
4. பள்ளி மாற்றுச்‌ சான்றிதழ்‌ நகல்‌.
5.சுய விவரங்கள்‌, 
6.வங்கிக்‌ கணக்கு விவரங்கள்.

இவ்வாறு உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
பேருந்து பயணிகளின் தாகம் தீர்க்க தவெக அரசு முயற்சி.. வரவேற்பை பெற்ற பயணி வாட்டர் பாட்டில்!
பேருந்து பயணிகளின் தாகம் தீர்க்க தவெக அரசு முயற்சி.. வரவேற்பை பெற்ற பயணி வாட்டர் பாட்டில்!
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
"வன கிராம மக்களை வெளியேற்றாதே" - மேகமலை, வருசநாடு விவகாரத்தில் கொதிக்கும் சீமான்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget