Covid-19 Guidelines: பணியிடங்களில் ஊழியர்களுக்கு இரண்டுகட்ட தடுப்பூசி கட்டாயம் - தமிழ்நாடு அரசு
தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு கட்டாயம் இரண்டு கட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டிருக்க வேண்டும்.
ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான பணியிடங்கள் மற்றும் 300-க்கும் அதிகமான பணியாளர்களின் எண்ணிக்கை இருக்கும் பணியிடங்களில் சுகாதார அதிகாரி நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வெளியிட்ட கோவிட்-19 பாதுகாப்பான பணியிடம், தொழிற்சாலை வழிமுறையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தொழிற்சாலைககளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு கட்டாயம் இரண்டுகட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வழிமுறைகளில் உள்ள முக்கிய அம்சங்கள்:
உடல் சோர்வு, உடல் வலி, இருமல் தொண்டை வலி, மூச்சு விடுதலில் சிரமம் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா என பணியாளர்களிடம் தினமும் கேட்டறிய வேண்டும். கடந்த ஒரு வாரத்தில் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா அறிகுறிகள் மற்றும் கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதா என கண்டறிய வேண்டும். அனைத்து பணியாளர்களையும் வெப்பமானி கொண்டு சோதித்த பின்பே அனுமதிக்க வேண்டும். உடல் வெப்பம் அதிகமாக உள்ளவர்களுக்கு, இதற்காக அமைக்கப்படும் தனிமை இடத்தில் தங்கவைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பணியின் போது அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் பணியிடங்களில் இருந்து வெளியே அனுப்பப்படுவர். சிசிடிவி கேமிரா மூலமாக ஊழியர்கள் முகக்கவச நடத்தை வழிமுறைகளை என்பதை மேற்பார்வையிட வேண்டும். பணிச்சூழல் காரணமாக முகக்கவசம் அணிய முடியாதிருந்தால், முகத்தை மறைக்கும் Face Shield பயன்படுத்த வேண்டும்.
பணியிடங்களில் ஒவ்வொருவரும் இரண்டு கெஜ தூர இடைவெளியை பின்பற்ற வேண்டும். தினந்தோறும் இருக்கைகள், மேசைகள், நாற்காலிகள் மற்றும் தொடர்புடைய இடங்களை கிருமி நாசினி கொண்டு முழுமையாக தூய்மைப்படுத்தப்பட வேண்டும். கைகளை அடிக்கடி கழுவும் வகையில் ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை மேற்பார்வையிடுவதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும்.
உணவு, தேநீர் அருந்தும் இடங்களில் அதிகமானோர் கூடாமல் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிறு சிறு குழுக்களாக அமைத்து தேநீர், உணவு அருந்த அனுமதிக்க வேண்டும். கொரோனா அறிகுறிகள் கொண்ட ஊழியர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள். கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்: தொடர்பிலிருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரைக் கண்டறியும் பணியில் ஈடுபட வேண்டும். தொழிற்சாலைககளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு கட்டாயம் இரண்டு கட்டு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டிருக்க வேண்டும்.
இந்த நோய் பற்றியும், இதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் பணியாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கொரோனா விஷயத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
மேலும் வாசிக்க: