மேலும் அறிய

TN Govt Formation: விஜய் முதல்வராக முட்டுக்கட்டை.. மெரினாவில் போராட்டமா? - போலீசார் குவிப்பு!

Tamil Nadu Government Formation: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காதது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பலரும் போராட்டம் நடத்த வேண்டும் என கூறி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் போராட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மெரினாவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

விஜய் முதலமைச்சராவதில் முட்டுக்கட்டை

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வென்றது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிக இடங்களில் வென்ற தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு விஜய் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு கடிதம் அனுப்பினார். தொடர்ந்து நேரிலும் சந்தித்தார். 

ஆனால் தமிழ்நாடு சட்டமன்றத்தைப் பொறுத்தவரை 118 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்பதால் விஜய்க்கு 12 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவைப்பட்டது. இதில் திமுக கூட்டணி இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி அந்த கூட்டணியை முறித்து இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 பேர் ஆதரவை தமிழக வெற்றிக் கழகத்திற்கு வழங்கியுள்ளது.

ஆளுநரை இரண்டாவது நாளாக விஜய் இன்றும் சந்தித்தார். ஆனால் பெரும்பான்மை நிரூபிக்காமல் எப்படி ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என ஆளுநர் விஜயிடம் கேட்டதாக சொல்லப்படுகிறது. விஜய் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 2 வாரங்கள் கால அவகாசம் கேட்டிருந்தார். எனினும் ஆளுநர் பெரும்பான்மைக்கான எம்.எல்.ஏ,க்களின் கடிதங்கள் இருந்தால் தான் அழைக்க முடியும் என்பதில் திட்டவட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மிகப்பெரிய அரசியல் சிக்கல் எழுந்துள்ளது. 

மெரினாவில் போராட்டமா?

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காதது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் ஆளுநர் அர்லேகருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். இதனிடையே 2017ம் ஆண்டு மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு புரட்சி போல விஜய்க்கு ஆதரவாக மற்றொரு போராட்டம் வெடிக்கும் என சமூக வலைத்தளங்கள் வாயிலாக ழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். கடற்கரை உள்சாலைப் பகுதிக்கு வரும் அனைத்து பாதைகளும் பேரிகார்டு கொண்டு அடைக்கப்பட்டு தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். 

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget