மேலும் அறிய

TN fake news case: வட மாநிலத்தவர்கள் விவகாரம்; பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் குமார் உம்ராவுக்கு ஜாமீன் மறுப்பு!

TN fake news case: வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி பிரசாந்த் குமார் உம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி பிரசாந்த் குமார் உம்ராவுக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. 

சமூக வலைதளங்களில் வதந்தி வீடியோ

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பல வீடியோக்கள் பகிரப்பட்டு வந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. பதற்றமான சூழலை கட்டுக்குள் கொண்டுவர தமிழ்நாடு, பீகார் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்ததன. அதோடு, தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கடி எடுக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, வதந்திகளைப் பரப்பியவர்கள் மீது கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.  

பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு:

தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளி தாக்கப்பட்டதாக பொய்யான செய்தி பரப்பிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளார்  பிரசாந்த் உம்ரா மீது  தூத்துக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இவரை கைது செய்ய திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.  இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரசாந்த் உம்ரா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 

டெல்லி உயர்நீதிமன்றம் -மனு 

அப்போது, இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது. 

தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு செய்துள்ளதால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் 10 நாட்களுக்குகள் (மார்ச், 20- ஆம் தேதிக்குள்) ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மனுதாரர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிவாரணத்தைக் கோரலாம் என்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்மித் சிங் தெரிவித்திருந்தார்.  

ஜாமீன் வழங்க மறுப்பு:

இதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (மார்ச், 14) விசாரணைக்கு வந்தது. 

தமிழ்நாட்டில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் வீடியோ சித்தரிப்பு செய்யப்பட்டுள்ளது என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, முன்ஜாமீன் கோரிய வழக்கை மார்ச் 17- ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget