மேலும் அறிய

Kuwait Fire Death: ரூ.5 லட்சம் நிதியுதவி.. குவைத் தீவிபத்தில் இறந்த தமிழர்களுக்கு நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய தேவையான உதவிகளை குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து அயலகத் தமிழர் நலத்துறை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவையான உதவியை தமிழக அரசு தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வரும் பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், உடல்களை தனி விமானம் மூலம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தீ விபத்தில் 7 தமிழர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 8 பேரின் நிலை என்ன தெரியாமல் இருப்பதால் அவர்களின் குடும்பத்தினர் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. 

இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் 12-6-2024 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த  வீராசாமி மாரியப்பன், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த  எபமேசன் ராஜு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த  கோவிந்தன் சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த  புனாஃப் ரிச்சர்ட் ராய், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த  கருப்பணன் இராமு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த  முகமது ஷெரிப் ஆகிய தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்து வருகிறேன் .

உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாகக் கொண்டு வருவதற்குக் குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அயலகத் தமிழர் நலத்துறைக்கு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளேன். அதன் பயனாக, உயிரிழந்த ஏழு தமிழர்களின் உடல்களும், தனிவிமானத்தின் மூலம் இந்தியாவிற்குக் கொண்டுவர விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவை வந்தடையும், தமிழர்களின் உடல்களை உடனடியாகத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கு பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும், தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இது மட்டுமல்லாமல், இந்தக் கொடிய தீவிபத்தில் காயமடைந்து, குவைத் நாட்டிலேயே, சிகிச்சை பெற்று வரும் நம் தமிழ்ச்சொந்தங்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டிடுமாறு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு நான் அறிவுரை வழங்கியதையொட்டி, உரிய நடவடிக்கைகளை அத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய தேவையான உதவிகளை குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து அயலகத் தமிழர் நலத்துறை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குவைத் நாட்டில் பணிபுரிந்து வரும் தமிழர்கள் அங்கு கொடிய தீவிபத்திற்கு ஆளானதுடன் உயிர்களை இழந்தும் தீக்காயங்களுக்குச் சிகிச்சைகள் பெற்றும் வரும் நிலையை எண்ணி, வேதனையில் ஆழ்ந்துள்ள என் அருமை தமிழ்நாட்டு உறவினர்களுக்கு தமிழ்நாடு அரசு எல்லா உதவிகளையும் வழங்கிடத் தயாராக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவிற்குள் தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி எண். +91 1800 309 3793 அதே போன்று குவைத் நாட்டில் தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி எண் +91 80 6900 9900, +91 80 6900 9901. இந்த இரண்டு எண்கள் வாயிலாகவும், அயலகத் தமிழர் நலத்துறையைத் தொடர்பு கொண்டு தேவைப்படும் தகவல்களைப் பெற்றிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
Shubman Gill Record: கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
Shubman Gill Record: கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Thackeray Brothers Reunite: 20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
Aadhar: ஆதார் கார்டை தொலைச்சிட்டீங்களா? வீட்டில் இருந்தபடியே வாங்க இதுதான் ஈஸி வழி!
Aadhar: ஆதார் கார்டை தொலைச்சிட்டீங்களா? வீட்டில் இருந்தபடியே வாங்க இதுதான் ஈஸி வழி!
கத்துக்குட்டிகள் எல்லாம் கற்றுத் தர வேண்டாம்... அமைச்சர் கோவி.செழியன் வைத்த குட்டு யாருக்கு?
கத்துக்குட்டிகள் எல்லாம் கற்றுத் தர வேண்டாம்... அமைச்சர் கோவி.செழியன் வைத்த குட்டு யாருக்கு?
Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Thirumavalavan: அதிமுகவுடன் மட்டும் ப்ரெண்ட்ஷிப்பா? விஜய்க்கு திருமாவளவன் கேள்வி!
Embed widget