மேலும் அறிய

Half Yearly Exam: 6- 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்குத் தொடங்கிய அரையாண்டுத் தேர்வு; விடுமுறை எப்போது?- விவரம்

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று (டிசம்பர் 15ஆம் தேதி) முதல் அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. இந்தத் தேர்வு டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று (டிசம்பர் 15ஆம் தேதி) முதல் அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. இந்தத் தேர்வு டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில், 6, 8, 10, 12 ஆம் வகுப்புகளுக்கு காலையிலும், 7, 9, 11 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெற உள்ளது. 

2022- 2023 ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இந்தத் தேர்வு நடைபெறுகிறது. 

அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாக வினாத் தாள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக தேர்வு நாட்களுக்குரிய வினாத் தாள்களை பெற தங்கள் பள்ளி சார்பாக ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அவ்விவரத்தினை சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப் பள்ளித் தலைமையாசிரியருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தல் வேண்டும் என்று கூறப்பட்டது. 

Half Yearly Exam: 6- 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்குத் தொடங்கிய அரையாண்டுத் தேர்வு; விடுமுறை எப்போது?- விவரம்

வினாத் தாள் விநியோகம்

அரையாண்டுத் தேர்வு கால அட்டவணையின்படி, தங்கள் பள்ளி சார்பாக அனுமதிக்கப்பட்ட நபர் சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மண்டல மையப்பள்ளி தலைமையாசிரியரை அணுகி அந்தந்த தேர்வு நாட்களுக்குரிய (முற்பகல் தேர்விற்கான வினாத்தாட்கள் காலை 7.30 மணியிலிருந்தும், பிற்பகல் தேர்விற்குரிய வினாத்தாட்கள் நண்பகல் 12 மணியிலிருந்தும்) வினாத்தாட்களை சரியான முறையில் பெற வேண்டும் எனவும் உரிய நேரத்திற்குள் மாணவர்களுக்கு வழங்கி தேர்வுகளை எவ்வித புகார்களுக்கு இடமளிக்காமல் சிறப்பான முறையில் நடத்தத் தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

கடந்த காலாண்டுத் தேர்வில் பள்ளிகளே வினாத் தாள்களைத் தயாரித்துக்கொள்ள பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அரையாண்டுத் தேர்வுக்கு தமிழ்நாடு முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படை பின்பற்றப்பட்டு வருகிறது. 

அரையாண்டு  விடுமுறை

இன்று தொடங்கும் அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 23 வரை நடைபெறுகிறது. 24ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. ஜனவரி 1 வரை விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜனவரி 2ஆம் தேதி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளன. 

அதேபோல சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கும் பருவத் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! ஆகஸ்ட் 3 வரை எந்தெந்த மாவட்டங்களில் ஜாக்கிரதையா இருக்கணும்?
இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை! ஆகஸ்ட் 3 வரை எந்தெந்த மாவட்டங்களில் ஜாக்கிரதையா இருக்கணும்?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
32 கி.மீ மைலேஜ்... ரூ. 3.49 லட்சம் விலை! முதன்முறையாக கார் வாங்குபவர்களுக்கு மாருதி கொடுத்த மாஸ் ஆஃபர்!
maruti suzuki s presso : 32 கி.மீ மைலேஜ்... ரூ. 3.49 லட்சம் விலை! முதன்முறையாக கார் வாங்குபவர்களுக்கு மாருதி கொடுத்த மாஸ் ஆஃபர்!

வீடியோ

Kangana Ranaut on CJP Protest :”போராட்டமா இது வாந்தி வருது இவங்களை வளர்த்தது யார்?” மாணவர்களை அசிங்கப்படுத்திய கங்கனா
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 29-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; இந்த லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
Embed widget