மேலும் அறிய

சாலையில் ‘மரண ஓட்டம்’... தாறுமாறாக பறந்த ஈச்சர் வேன்! துரத்திப் பிடித்த போலீசாருக்கு அதிர்ச்சி!

புதுச்சேரியில் இருந்து சென்னையை நோக்கி பார்சல் பொருட்களை ஏற்றிச் சென்ற ஈச்சர் வேன், திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்ததுபோல் தாறுமாறாக சென்றதால் பரபரப்பு!

விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து சென்னையை நோக்கி பார்சல் பொருட்களை ஏற்றிச் சென்ற ஈச்சர் வேன், திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்ததுபோல் தாறுமாறாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வாகனத்தை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். வாகனத்தை ஓட்டிய டிரைவர் கடுமையான மதுபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வழியாக செல்லும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்திலிருந்து பார்சல் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஈச்சர் வேன் ஒன்று சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது.

திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அந்த ஈச்சர் வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததுபோல் சாலையில் அங்கும் இங்குமாக தாறுமாறாக சென்றதாக கூறப்படுகிறது. முன்னால் சென்ற வாகனங்களை நெருங்கிச் செல்வதும், சாலையில் வாகனம் நிலைதடுமாறி செல்வதுமாக இருந்ததால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

இதனை கவனித்த அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திண்டிவனம் போலீசார், சந்தேகத்திற்கிடமாக சென்ற ஈச்சர் வேனை பின்தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்ற போலீசார், வாகனத்தை மடக்கிப் பிடித்து நிறுத்தினர்.

பின்னர் ஈச்சர் வேனில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். வாகனத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் அல்லது வேறு ஏதேனும் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்ற கோணத்திலும் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டது.

இதனிடையே, வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடுமையான மதுபோதையில் இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. போலீசார் கேட்ட கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க முடியாமல் அவர் மவுனமாக இருந்ததாகவும், இதனால் போலீசாருக்கு சந்தேகம் மேலும் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து வாகனத்தில் இருந்த பார்சல் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். நீண்ட நேர சோதனைக்குப் பின்னர், வாகனத்தில் தடை செய்யப்பட்ட அல்லது கடத்தல் பொருட்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஈச்சர் வேனை ஓட்டி வந்தவர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பதும், அவர் புதுச்சேரியில் இருந்து பார்சல் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி சென்றதும் தெரியவந்தது.

தேசிய நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து உள்ள நேரத்தில், மதுபோதையில் கனரக வாகனத்தை தாறுமாறாக இயக்கிய சம்பவம் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. மதுபோதையில் தொடர்ந்து வாகனம் இயக்கியிருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் கூட ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்ததாக அப்பகுதி வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து பொதுமக்களின் உயிருக்கும், சாலையில் பயணித்த மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய டிரைவர் அய்யனாரை போலீசார் திண்டிவனம் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக திண்டிவனம் நகர காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
விழுப்புரம்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; வடிகால் பணிகளை ஆட்சியர் ஆய்வு!
விழுப்புரம்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; வடிகால் பணிகளை ஆட்சியர் ஆய்வு!
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Embed widget