குளித்தலை கொள்ளை: பள்ளி தாளாளர் வீட்டில் துணிச்சலான கொள்ளை, 10 பேர் கைது! அதிர்ச்சி தரும் பின்னணி!
சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்வதில் கொலை சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற மாருதி காரானது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

குளித்தலையில் தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 10 குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பணம் மற்றும் கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகளை விரைந்து பிடித்த தனிப்படை போலீசாரை மாவட்ட எஸ்பி நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை காவிரி நகரில் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி அதிகாலை கருணாநிதி என்பவரின் வீட்டில் முகமூடி அணிந்து வீடு புகுந்த மூன்று கொள்ளையர்கள் அவரது இளைய மகள் அபர்ணாவை அறிவால் தாக்கி மிரட்டி வீட்டின் பீரோவில் இருந்த ரூபாய் 7 லட்சம் பணம் மற்றும் 7, 3/4 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக கரூர் மாவட்ட எஸ்பி ஜோஷ் தங்கையா குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் பசுபதிபாளையம், குளித்தலை மற்றும் வாங்கல் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படையை அமைத்து குற்றவாளிகளை தேடினார்.

சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்வதில் கொலை சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற மாருதி காரானது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அக்காரானது கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் என தெரிய வந்தததையடுத்து அதனை கைப்பற்றி குளித்தலை காவல் நிலையம் கொண்டு வந்தனர். குற்றவாளிகளான ஹரிஷ், முருகேஷ், பிரகாஷ், ரங்கநாதன் என்கிற பலூன், பால்பாண்டி, கண்ணன், பார்த்திபன், ரவிசங்கர், அஜய்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 6 லட்சம் பணம் மற்றும் பாலினோ காரினை பறிமுதல் செய்து அவர்களை குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக 26 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கனிச்செல்வம் என்பவரின் கைது செய்து அவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தினை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கில் கைது செய்யப்பட்ட தரகம்பட்டியைச் சேர்ந்த சிட்பண்ட்ஸ் உரிமையாளரான முருகேஷ் என்பவர் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தனக்கு தெரிந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் பிரகாஷ், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்த அஜய்குமார் மற்றும் விளாத்திகுளத்தை சேர்ந்த கனிச்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து இக்கொள்ளை சம்பவத்தை நிறைவேற்றியது தெரிய வந்தது.

வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் 7 லட்சம் பணம் மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பதிவெண் இல்லாத வெள்ளை நிற மாருதி ஸ்விப்ட் கார் மற்றும் பலினோ கார், ஆயுதங்கள், கையுறைகள் மற்றும் செல்போன்கள் ஆகியவைகளை இன்று கரூர் மாவட்ட எஸ்பி ஜோஷ் தங்கைய்யா குளித்தலை காவல் நிலையத்தில் பார்வையிட்டு கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்த டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான தனிப்படையினரை வெகுவாக பாராட்டினர்.மேலும் இது கொலை சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு தங்களிடம் பணிவாக நடந்து கொண்டு, இரவும் பகலமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை விரைந்து பிடித்த அனைத்து காவலர்களுக்கு தனியார் மெட்ரிக் பள்ளி தாளாளர் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.





















