வீட்டுக்கு சீக்கிரம் போயிடுங்க மக்களே: இன்று இரவு 19 மாவட்டங்களில் மழை இருக்கு!
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று இரவு காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 19 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிவரையில் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) April 4, 2025
இன்று கனமழை:
இந்நிலையில், 7 நாட்களுக்கு வானிலை எவ்வாறு இருக்கும் என்றும் எந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது குறித்தும் வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, இன்று நீலகிரி, கோயம்புத்தூர். திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Also Read: ”வம்புச் சண்டைக்கு வரல..தலைமை போட்டியில் நான் இல்லை” - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
நாளை ( 05-04-2025 )
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை :
இன்று (04-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34' செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (05-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.






















