Weather: கனமழை ஸ்டார்ட்! 17 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: உங்க ஊர் இருக்கா?
Tamilnadu Weather Today: தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், தற்போது பல மாவட்டங்களில் கனமழையானது நேற்று முதல் பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று வானிலை எப்படி இருக்கும், நாளை வானிலை எப்படி இருக்கும், எங்கு கனமழை பெய்யும் என்பது குறித்து பார்ப்போம்.
இன்றைய வானிலை:
இந்நிலையில் வானிலை தொடர்பாக வானிலை மையம் தெரிவித்ததாவது, “ தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய {மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்,
நீலகிரி, கோயம்புத்தூர். திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கைhttps://t.co/467dVuUdtd pic.twitter.com/NyWc4pVqy5
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) April 3, 2025
நாளைய வானிலை: ( 04-04-2025 )
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
05-04-2025:
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
06-04-2025:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய [மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07-04-2025 முதல் 09-04-2025 வரை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை :
இன்று (03-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய வேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 26' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (04-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
03-04-2025 முதல் 05-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் குறையக்கூடும். வட உள் தமிழகத்தின் ஒருசில இடங்களில் 2 செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.






















