(Source: ECI/ABP News/ABP Majha)
Tamilnadu Round UP: சாம்சங் போராட்டத்தில் மாவோயிஸ்ட்டுகளா? சரியும் மேட்டூர் அணை நீர்வரத்து: இதுவரை இன்று.!
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து சரிவு
கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 15,710 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 11,208 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 9,206 கன அடியாக குறைந்துள்ளது.
சாம்சங் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள், சமூகவிரோதிகள் ஊடுருவலா ? - காஞ்சிபுரம் போலீஸ் பரபரப்பு விளக்கம்
சமூக விரோதிகள், மாவோயிஸ்டுகள் சிலர் தொழிலாளர்கள் என்ற போா்வையில் உள்நுழைந்து, திசை திருப்ப முயற்சி செய்ததாக தகவல் வந்தது.
போராட்டத்திற்கு சென்ற ஊழியர்களை காஞ்சிபுரம் போலீசார், தடுத்து நிறுத்தி பேருந்தில் அடையாள அட்டை சோதனை செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த வீடியோவில் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை: வெடிகுண்டு மிரட்டல்களால் அச்சத்திற்கு ஆளாகும் பொதுமக்கள்
மதுரை பள்ளிகளில் அடுத்தடுத்து அச்சுறுத்தும் வெடிகுண்டு மிரட்டல்: குற்றவாளியை கண்டறிவதில் சிக்கல்
கோவை வெடிகுண்டு சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில் தீபாவளி நெருங்கும் நேரத்தில் தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்களால் அச்சத்திற்கு ஆளாகும் பொதுமக்கள்.
இந்தியா கூட்டணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
ஜம்மு காஷ்மீர் தேர்தல்; இந்தியா கூட்டணி வெற்றி:
முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியா கூட்டணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது ” அமோக வெற்றி பெற்ற ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கும் JKNC-INC கூட்டணிக்கும் வாழ்த்துகள்! இது, இந்தியாவிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றியை விட அதிகம்.மத்திய பாஜக அரசு அநியாயமாக பறித்த ஜம்மு காஷ்மீரின் கண்ணியம் மற்றும் மாநிலத்தை மீட்டெடுப்பதற்கான அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான ஆணை இது.
இந்த தருணம் ஒவ்வொரு காஷ்மீர் மக்களின் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.