மேலும் அறிய

நாளை 9 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை: இந்த பகுதி மக்களே உஷார்.!

Tamilnadu Rain Updates: தமிழ்நாட்டில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை குறித்து வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

புயல்:

நேற்று (22-10-2024) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (23.10.2024) காலை மணி அளவில் புயலாக வலுபெற்று,  ஒரிசா தென்கிழக்கே தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்காளம்) தெற்கு தென்கிழக்கிலும், வங்கதேசத்திற்கு தென்கிழக்கிலும் நிலைகொண்டுள்ளது.

இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும்.

இது, வடக்கு ஒரிசா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24ஆம் தேதி இரவு 25ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தமிழ்நாட்டில் வானிலை நிலவரம்:

தமிழ்நாட்டை பொறுத்தவரையில்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

23.10.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

24.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர்,ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி. திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை: வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது அதிகபட்ச வெப்பநிலை 34-35* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"போரை ஆதரிக்கவில்லை" ரஷிய அதிபர் புதின் முன்பு பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவுக்கு வழிகாட்டும் தென்னிந்தியா.. ஏபிபி நெட்வொர்க்கின் ‘தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024’
இந்தியாவுக்கு வழிகாட்டும் தென்னிந்தியா.. ஏபிபி நெட்வொர்க்கின் ‘தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024’
"மணமகள் பெயரை கேட்டால் கஷ்டமா இருக்கு" திருமண விழாவில் குட்டி கதை சொன்ன தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Watch Video:
Watch Video:"சேட்ட புடிச்ச பையன் சார்" - ஓடும் பேனை ஒற்றை கையில் நிறுத்திய தவான்! வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Govi Chezhian : ”அமைச்சராகியும் மரியாதை இல்ல” பதவியால் என்ன பிரயோஜனம்! புலம்பும் கோவி செழியன்?Mamallapuram : ‘’எங்க மேல தப்பு இல்ல! ஒரிஜினல் VIDEO பாருங்க’’ புலம்பும் பெண்கள்Priyanka Gandhi Wayanad  : ’’35 ஆண்டுகள் கட்சிக்காக..முதல்முறையாக எனக்காக !’’பிரியங்கா EMOTIONALED Raids Vaithilingam House | EPS பக்கம் சாய்ந்த வைத்திலிங்கம்?அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"போரை ஆதரிக்கவில்லை" ரஷிய அதிபர் புதின் முன்பு பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!
இந்தியாவுக்கு வழிகாட்டும் தென்னிந்தியா.. ஏபிபி நெட்வொர்க்கின் ‘தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024’
இந்தியாவுக்கு வழிகாட்டும் தென்னிந்தியா.. ஏபிபி நெட்வொர்க்கின் ‘தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024’
"மணமகள் பெயரை கேட்டால் கஷ்டமா இருக்கு" திருமண விழாவில் குட்டி கதை சொன்ன தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Watch Video:
Watch Video:"சேட்ட புடிச்ச பையன் சார்" - ஓடும் பேனை ஒற்றை கையில் நிறுத்திய தவான்! வைரல் வீடியோ
Minimum Pass Mark: இனி 10ஆம் வகுப்பில் 20 மதிப்பெண்கள் எடுத்தாலே பாஸ்: அரசு அதிரடி முடிவு- ஆனாலும் ஒரு ட்விஸ்ட்!
இனி 10ஆம் வகுப்பில் 20 மதிப்பெண்கள் எடுத்தாலே பாஸ்: அரசு அதிரடி முடிவு- ஆனாலும் ஒரு ட்விஸ்ட்
வாலிபரை குத்திக் கொலை செய்த தொழிலாளி : ஆயுள் தண்டனை விதித்த தஞ்சை கோர்ட்
வாலிபரை குத்திக் கொலை செய்த தொழிலாளி : ஆயுள் தண்டனை விதித்த தஞ்சை கோர்ட்
BSNL Recharge: 52 GB நெட்! 2 மாசத்துக்கு அன்லிமிடேட் கால்! BSNL அசத்தல் ப்ளான் எவ்வளவு?
BSNL Recharge: 52 GB நெட்! 2 மாசத்துக்கு அன்லிமிடேட் கால்! BSNL அசத்தல் ப்ளான் எவ்வளவு?
Lucky Bhaskar:
Lucky Bhaskar: "நானே அஜித் ரசிகன்தான்.. அவரு மாதிரி யாரும் வர முடியாது" துல்கர் சல்மான் ஓபன் டாக்
Embed widget