TN Rain: சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இன்று இரவு மழை இருக்கு: ஊருக்கு போறவங்க பத்திரமா போங்க.!
Tamilnadu Rain Updates: தமிழ்நாட்டில் உள்ள 24 மாவட்டங்களில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று இரவு 10 மணி வரைக்குள் , 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
24 மாவட்டங்கள்:
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், திருச்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருவாரூர், நாகை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 24 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 29, 2024
அடுத்த சில தினங்களுக்கு வானிலை மையம் தகவல் தெரிவித்ததாவது,
தென்னிந்திய கிழக்கு கடலோர பகுதிகளை ஒட்டி ஒரு மேழடுக்கு சுழற்சி நிலவுகிறது
நாளை: அக்.30
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள்: அக்.31
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 1:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும். இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்காசி மற்றும் நெல்லை மலைப் பகுதிகள், நீலகிரி , கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், மதுரை மற்றும் கன்னியாகுமரி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முள்ளறிவிப்பு
அடுத்து 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை