TN Rain Alert: அடுத்த 3 மணி நேரம்..! கொட்டப் போகுது மழை..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா..?
TN Rain : தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 6 செ.மீட்டரும், தேனி வீரபாண்டியில் 4 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகரிலும், தேனி ஆண்டிபட்டியிலும் தலா 3 செ.மீட்டரும், கள்ளக்குறிச்சியின் ரிஷிவந்தியம், பெரம்பலூரில் 2 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 தினங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
26.11.2022, 27.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 28.11.2022 முதல் 30.11.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தாலும், வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை பொழிவு குறைவாகவே இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.