களைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்


இன்று தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து தொழில் நிறுவனங்களிலும் ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இந்நிலையில் தஞ்சையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  மகா சக்தியான துர்கா தேவியைப் போற்றும் வகையில் ஒன்பது நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் ஓர் விழா தான் நவராத்திரி. இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவியின் 9 வடிவங்கள் வழிபடப்படுகிறது. தென்னிந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று ஆயுத பூஜை.மேலும் வாசிக்க...


பா.ஜ.க.-வில் இருந்து விலகினார் நடிகை கௌதமி


பா.ஜ.க.-வில் இருந்து விலகுவதாக நடிகை கெளதமி அறிவித்துள்ளார். மிகுந்த வேதனையுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு X தளத்தில் அறிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மிகுந்த வேதனையுடன் விலகுவதாக அறிவித்துள்ள கெளதமி, நில அபகரிப்பு வழக்கில் அவர் புகாரளித்துள்ள சி.அழகப்பன் என்பவருக்கு பா.ஜ.க. கட்சி ஆதரவு அளித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மகள் மற்றும் தன்னுடைய எதிர்காலத்திற்காக சட்டரீதியிலாக தொடர்ந்து போராடிவரும் கெளதமிக்கு பா.ஜ.க. தரப்பில் எந்தவித ஆதரவும் அளிக்கவில்லை என்பது வருத்தமாக இருப்பதாக ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் வாசிக்க..


டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமன பரிந்துரை -நிராகரித்த ஆளுநர் ரவி


டி.என்.பி.எஸ்.சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. டி.என்.பி.எஸ்.சி தலைவர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி வேறு ஒருவரை தேர்வு செய்ய ஆளுநர் பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் வாசிக்க..


ஆயுத பூஜை - பூ விலை உயர்வு


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், ஆரணி பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டுகளில் கடந்த ஒரு மாத காலமாக பூக்களின் விலை மந்தமாக இருந்த நிலையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி மற்றும் தொடர் சுப முகூர்த்த தினங்கள் நடைபெறுவதாலும் பூ மார்க்கெட்டுகளில் பூக்களின் விலையேற்றம் உச்சம் தொட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், காஞ்சி, வெறையூர், எறையூர், திருவண்ணாமலை, கடலாடி , புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. இதில் மல்லிகை, முல்லை, ஜாதி, சம்மங்கி, கோழிக்கொண்டை, அரளி, சாமந்தி உள்ளிட்ட பூக்கள் வகை விவசாயம் நடந்து வருகிறது. மேலும் வாசிக்க..


விஜயதசமி மாணவர் சேர்க்கை மும்முரம்


விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில்,  அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் நவராத்திரி பண்டிகையின் கடைசி நாளான விஜயதசமி நாள் அன்று பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் இந்த தினத்தில் தங்கள் குழந்தைகளைக் கை விரல் பிடித்து, நெல்லைத் தட்டில் பரப்பி, முதல் எழுத்தாக ’அ’ என்று எழுதப் பழக்குவர். விஜய தசமியை முன்னிட்டு கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது..மேலும் வாசிக்க..


58 வயதிலும் ஆசிரியர் பணியில் சேரலாம்


ஆசிரியர் பிரிவில் சேருவதற்கான வயது  வரம்பை, இதர பிரிவினருக்கு 58 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையில், “ பள்ளிக்கல்வித்துறையின் கீழ்  உள்ள பள்ளிகளில்  ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40 வயது என்றும், இதர பிரிவினர்களுக்கு 45 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேலும் வாசிக்க..


வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்


வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் நேற்று வட கிழக்கு பருவமழை தொடங்கியது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் அதாவது 19 ஆம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது, பின்னர் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மாறியது...மேலும் வாசிக்க..