மேலும் அறிய
விஜய் பரப்புரை வாகனம்-வழக்குப்பதிவு, களமிறங்கிய சிறப்பு விசாரணைக்குழு, 12 மாவட்டங்களில் கனமழை - 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும், தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு.
- உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, விஜய்யின் பரப்புரை வாகனம், அதன் ஓட்டுநர் மற்றும் பைக் ஓட்டிச்சென்ற இருவர் மீதும் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- தலைமறைவாக உள்ள தவெக நாமக்கல் மாவட்டச் செயலாளரை கைது செய்ய போலீசார் தீவிரம். மருத்துவமனை தாக்கப்பட்ட வழக்கில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை.
- கரூரில் விஜய் பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு இன்று விசாரணையை தொடங்கியது.
- தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு 45% வாக்குகள் உள்ளதாகவும், திமுக கூட்டணிக்கு இணையாக யாரும் களத்தில் இல்லை எனவும் காங்கிரஸ் தமிழ்நாடு முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
- காலாண்டு விடுமுறைக்குப் பின் தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு. 2-ம் பருவத்திற்கான பாடநூல்களை உடனடியாக வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.
- வண்டலூர் உயிரியல் பூங்காவில் லயன் சஃபாரி பகுதியில் புதிதாக விடப்பட்ட சிங்கம் மாயம். உணவுக்கு திரும்பி வரவில்லை எனக் கூறியுள்ள அதிகாரிகள், சஃபாரி பகுதியிலேயே சுற்றிவரக் கூடும் என தகவல்.
- சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.
- சிவகங்கை மாவட்டம் எஸ்.காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் புதிய முளைகொட்டு திண்ணை உற்சவ விவில் இரு சமூகத்தினர் இடையே மோதல். கல்வீச்சு தாக்குதலில் 5 பேர் காயம் என தகவல்.
- ஈரோடு பாலமலை சித்தேஸ்வர் கோயிலுக்கு சென்று வழிதவறி, அடர்ந்த காட்டிற்குள் சிக்கிக்கொண்ட 36 பக்தக்ளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கல்வி
கல்வி
வணிகம்
Advertisement
Advertisement





















