Tamilnadu Roundup: பொங்கல் தொகுப்பு எப்போது விநியோகம்? ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கைக் கூண்டு!
Tamilnadu RoundUP: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் சஸ்பெண்ட் - அரசு அதிரடி உத்தரவு
பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் முன்பு பரிசுத்தொகுப்பு விநியோகம் - கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
தமிழ்நாட்டில் உள்ள 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
வட தமிழ்நாடு, கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரிக்கை
அம்பேத்கர் என்றால் ஃப்ளவர் இல்ல, ஃபயர்; புஷ்பா பட பாணியில் பேசிய கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உலா வந்த காட்டு யானை; பீதியில் பாதியிலே வாகனத்தை நிறுத்திய வாகன ஓட்டிகள்
அதிக சுங்கக்கட்டணம் வசூல்; கடலூர்- சிதம்பரம் வழித்தடத்தில் இன்று தனியார் பேருந்துகள் ஸ்டிரைக்
நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் 2வது நாளாக அகற்றம் - தீவிர கண்காணிப்பில் தமிழக அதிகாரிகள்
ராமேஸ்வரம் மீனவர்களை நடுக்கடலில் விரட்டியடித்த இலங்கை கடற்படை - வலைகளை அறுத்தும் அட்டூழியம்
சேலம் வழியாக வட மாநிலங்கள் செல்லும் 6 ரயில்கள் முழுமையாக ரத்து - பயணிகள் அதிர்ச்சி
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; கன்னியாகுமரி அருகே கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் நடனமாடி ஊர்வலம்
யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றவர்கள் ஓசூரில் கைது - 2 பேருக்கு வலைவீச்சு
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் விற்பனைகள் படுதீவிரம் - வியாபாரிகள் மகிழ்ச்சி
உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியில் சுங்கக்கட்டணம் செலுத்தாத அரசுப்பேருந்தை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள்