வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு ! - தமிழக அரசு அறிவிப்பு

2017, 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்காதவர்கள் அடுத்த மூன்று மாதத்திற்குள் வேலைவாய்ப்பு அலுவவலகத்தில் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Continues below advertisement

தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசின் அரசாணை 204,  28.5.2021ன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவித்தவாறு இச்சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.5.2021 முதல் மூன்று மாதங்களுக்குள் அல்லது 27.8.2021-க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பம் அளித்து புதுப்பித்துக் கொள்ளலாம்.

Continues below advertisement


மேலும் படிக்க : https://tamil.abplive.com/news/india/cm-stalin-inspected-corona-patients-care-in-esi-hospital-in-coimbatore-4524/amp

இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி 27.8.2021 வரை பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை வேலைவாய்ப்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola