தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் வரும் ஜூலை 15 -ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பல்வேறு அரசுத் துறைகளின் சேவைகள் ஒரே இடத்தில் மக்களுக்கு வழங்கப்படும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

Continues below advertisement

 

முதலமைச்சர் அறிவிப்பின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளிலும் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டம் ஜூலை 15 முதல் அக்டோபர் 15 வரை செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மொத்தம் 130 முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் நகர்ப்புறப் பகுதிகளில் 32 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 98 முகாம்களும் அடங்கும்," 

Continues below advertisement

முதற்கட்ட முகாம்கள் மற்றும் சேவைகள்

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை மொத்தம் 48 முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் நகர்ப்புறப் பகுதிகளில் 13 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 35 முகாம்களும் இடம்பெறும். இந்த முகாம்களில் நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். மேலும், பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். 

 

வீடு வீடாகச் சென்று தகவல் சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு

"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தமாக 1,00,494 வீடுகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நகர்ப்புறப் பகுதிகளில் 20,451 வீடுகளும், ஊரகப் பகுதிகளில் 80,043 வீடுகளும் அடங்கும். இந்த மாபெரும் பணிக்கு 329 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசுத் துறைகளின் திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து விரிவாக எடுத்துரைப்பார்கள். மேலும், இத்திட்டங்களில் பயனடைவதற்கான தகுதிகள் மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் குறித்தும் தெரிவிப்பதோடு, தகவல் கையேட்டையும், விண்ணப்பங்களையும் வழங்குவார்கள். இந்த வீடு வீடான விழிப்புணர்வுப் பணி கடந்த ஜூலை 7 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் இதர விண்ணப்பங்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள, ஆனால் விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின், அவர்கள் முகாம் நடைபெறும் நாளன்று அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டர்களில் விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து அளிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களை முறையாகப் பதிவேற்றம் செய்திட, ஒரு முகாமிற்கு 5 நபர்கள் வீதம் மொத்தம் 240 இல்லம் தேடிக் கல்வித் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இம்முகாம்களில் பெறப்படும் அனைத்து விண்ணப்பங்கள் மீதும் 45 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

பொதுமக்களுக்கான வேண்டுகோள்

"உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில், தங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பித்துப் பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செய்தியாளர்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார். மேலும் இத்திட்டம் அரசின் சேவைகளை மக்களின் வாசல் தேடி கொண்டு செல்வதோடு, அவர்களின் தேவைகளை நேரடியாக அறிந்து நிவர்த்தி செய்ய வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதற்கட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் நாட்கள்

 (ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 7 வரை)

ஜூலை 15, 2025 அன்று

  • மணல்மேடு, நிலவர் திருமண மண்டபம்.

 

  • சீர்காழி நகராட்சி, தாடாளன்கோவில் சுந்தரி அம்மாள் மண்டபம்.

 

  • மயிலாடுதுறை வட்டாரம், பல்லவராயன் பேட்டை, திருஇந்தளூர் பத்மவாசன் திருமண மண்டபம்.

 

  • செம்பனார் கோவில் வட்டாரம், கஞ்சாநகரம், சஸ்பென்ஸ் திருமண மண்டபம்.

ஜூலை 16, 2025 அன்று

  • மயிலாடுதுறை நகராட்சி, வெள்ளாலதெரு பட்டமங்கலம், வாசுகி திருமண மண்டபம்.

 

  • சீர்காழி வட்டாரம், காரைமேடு, அண்ணபெருமாள் திருமண மண்டபம்.

 

  • குத்தாலம் வட்டாரம், அஞ்சாவருதலை, திருமணஞ்சேரி ஏ.கே.பி திருமண மண்டபம்.

 

  • கொள்ளிடம் வட்டாரம், எடமணல் ஊராட்சி அலுவலக வளாகம்.

 

ஜூலை 17, 2025 அன்று

  • வைதீஸ்வரன்கோவில் பேரூராட்சி, வைதீஸ்வரன்கோவில் சரஸ்வதி திருமண மண்டபம்.

 

  • கொள்ளிடம் வட்டாரம், கடவாசல், ஆர்.எம்.ஆர் திருமண மண்டபம்.

 

  • சீர்காழி வட்டாரம், தர்மகுளம், காவேரிபூம்பட்டினம் வி.எம்.எஸ் திருமண மண்டபம்.

 

  • செம்பனார் கோவில் வட்டாரம், மாமாக்குடி பஞ்சாயத்து அலுவலகத் திடலுக்கு எதிரே.

ஜூலை 22, 2025 அன்று

  • குத்தாலம் பேரூராட்சி, குத்தாலம், சிதம்பரநாத முதலி தெரு, ஆம்ரா மகால்.

 

  • சீர்காழி நகராட்சி, தென்பாதி, ராஜேஸ்வரி திருமண மண்டபம்.

 

  • மயிலாடுதுறை வட்டாரம், திருமங்கலம், ஒய்.எம்.ஏ ஜாபர் திருமண மண்டபம்.

 

  • குத்தாலம் வட்டாரம், பெருஞ்சேரி, APOC கட்டிடம் வளாகம்.

ஜூலை 23, 2025 அன்று

  • மயிலாடுதுறை நகராட்சி, வெள்ளாலதெரு பட்டமங்கலம், வாசுகி திருமண மண்டபம்.

 

  • மயிலாடுதுறை வட்டாரம், தாழஞ்சேரி, பஞ்சாயத்து அலுவலகம் வளாகம்.

 

  • குத்தாலம் வட்டாரம், தேரிழந்தூர், கம்பர் திருமண மண்டபம்.

 

  • கொள்ளிடம் வட்டாரம், முதலைமேடு, சுபஸ்ரீ திருமண மண்டபம்.

ஜூலை 24, 2025 அன்று

  • தரங்கம்பாடி பேரூராட்சி, தரங்கம்பாடி ராஜா ராணி மஹால்.

 

  • மயிலாடுதுறை வட்டாரம், சேத்தூர், பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி எதிரில் உள்ள திடல்.

 

  • செம்பனார் கோவில் வட்டாரம், இளையாலுர், YR திருமண மண்டபம்.

 

  • கொள்ளிடம் வட்டாரம், ஆச்சாள்புரம், திருஞானசம்பந்தர் திருமண மண்டபம்.

ஜூலை 29, 2025 அன்று

  • சீர்காழி நகராட்சி, சீர்காழி, ரெத்தினாம்பாள் திருமண மண்டபம்.

 

  • சீர்காழி வட்டாரம், திருவாலி, ஏபிசி திருமண மண்டபம்.

 

  • செம்பனார் கோவில் வட்டாரம், கிள்ளியூர், APOC கட்டிடம் வளாகம்.

 

  • குத்தாலம் வட்டாரம், பெரம்பூர், அம்பிகா திருமண மண்டபம்.

ஜூலை 30, 2025 அன்று

  • மயிலாடுதுறை நகராட்சி, தரங்கை சாலை, பாலாஜி திருமண மண்டபம்.

 

  • மயிலாடுதுறை வட்டாரம், இளந்தோப்பு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளிக்கு எதிரே.

 

  • செம்பனார் கோவில் வட்டாரம், திருவிடைக்கழி, ஹாஜி சையத் அகமது பொதுநல மண்டபம்.

 

  • கொள்ளிடம் வட்டாரம், குன்னம், சாய்பாபா திருமண மண்டபம்.

ஜூலை 31, 2025 அன்று

  • கொள்ளிடம் வட்டாரம், ஏ.கே.சத்திரம், வசந்தன் திருமண மண்டபம்.

 

  • சீர்காழி வட்டாரம், புங்கனூர், நிக்காஹ் திருமண மண்டபம்.

 

  • செம்பனார் கோவில் வட்டாரம், திருநன்றியூர், நத்தம், பஞ்சாயத்து யூனியன் நடுப்பகுதி பள்ளி அருகில்.

 

  • குத்தாலம் வட்டாரம், கடலங்குடி, அறிஞர் அண்ணா திருமண மண்டபம்.

ஆகஸ்ட் 5, 2025 அன்று

  • சீர்காழி நகராட்சி, ரெத்தினாம்பாள் திருமண மண்டபம்.

 

  • குத்தாலம் வட்டாரம், கோமல், ஸ்ரீமதி திருமண மண்டபம்.

 

  • கொள்ளிடம் வட்டாரம், புதுப்பட்டினம், மலர்மங்கை திருமண மண்டபம்.

 

  • மயிலாடுதுறை வட்டாரம், குறிச்சி, பஞ்சாயத்து சேவை மையம் வளாகம்.

ஆகஸ்ட் 6, 2025 அன்று

 

  • மயிலாடுதுறை நகராட்சி, தரங்கை சாலை, பாலாஜி திருமண மண்டபம்.

 

  • சீர்காழி வட்டாரம், தென்பாதி, ராஜேஸ்வரி திருமண மண்டபம்.

 

  • மயிலாடுதுறை வட்டாரம், கங்கணம்புத்தூர், பஞ்சாயத்து அலுவலகம் வளாகம்.

 

  • செம்பனார் கோவில் வட்டாரம், சந்திரபாடி, சுனாமி குடியிருப்பு, சுகம் மண்டபம்.

ஆகஸ்ட் 7, 2025 அன்று

  • செம்பனார் கோவில் வட்டாரம், நல்லாடை, சரவண பாலாஜி திருமண மண்டபம்.

 

  • குத்தாலம் வட்டாரம், மங்கநல்லூர், PMS திருமண மண்டபம்.

 

  • கொள்ளிடம் வட்டாரம், திருமுல்லைவாசல், ஜே.எம் திருமண மண்டபம்.

 

  • மயிலாடுதுறை நகராட்சி, திருஇந்தளூர், கே-எஸ் திருமண மண்டபம்.

 

இந்த முகாம்கள் மயிலாடுதுறை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும், அரசின் நலத்திட்டங்களை கடைக்கோடி மக்களிடமும் கொண்டு சேர்ப்பதிலும் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.