TN Bus Ticket: தமிழ்நாட்டில் பேருந்துகள் கட்டணம் உயர்கிறதா? போக்குவரத்து துறை பதில் இதுதான்!
தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதற்கு தனியாக ஆணையம் அமைக்கப்படுவது குறித்து போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.
மதமிழ்நாட்டில் பொதுமக்கள் போக்குவரத்திற்காக பெரிதும் நம்பியுள்ளது பேருந்துகளையே ஆகும். சிறிய தூரம் மட்டுமின்றி தொலைதூரம் வரை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு விரைவுப் போக்குவரத்து கழகம், கும்பகோணம் போக்குவரத்து கழகம், விழுப்புரம் போக்குவரத்து கழகம் என பல போக்குவரத்து கழகங்களின் பெயர்களில் மண்டல வாரியாக பேருந்துகளை தமிழ்நாடு அரசு இயக்கி வருகிறது.
பேருந்து கட்டணம் உயர்வா?
பேருந்துகளின் சேவையை கண்காணிக்க போக்குவரத்து துறை இயங்கி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளின் கட்டணம் உயர இருப்பதாகவும், இதற்காக தமிழக அரசு தனி ஆணையம் அமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியது. இது பொதுமக்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உண்மை என்ன?
இந்த நிலையில், பேருந்து கட்டண விவகாரம் குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவ தொடர்பாக தனி ஆணையம் அமைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், தமிழ்நாடு அரசு எப்போதும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளாது என்றும் விளக்கம் அளித்தள்ளது.
தமிழ்நாட்டில் வெளியூர் செல்வதற்காக ரயில் போக்குவரத்து இயங்கினாலும், எப்போது சென்றாலும் செல்வதற்கு பேருந்துகளே பிரதானமாக இயங்கி வருகிறது. மேலும், குக்கிராமங்கள் வரை பேருந்துகளே இயக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழக மக்கள் பிரதானமாக பேருந்தையே நம்பியுள்ளதால் இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நிரம்பி வழியும் பேருந்துகள்:
தற்போது தமிழ்நாடு அரசு மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை திட்டத்தை இயக்கி வருகிறது. இந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான பெண்கள் பயன் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளி, பொங்கல், தொடர் விடுமுறைகள் மட்டுமின்றி சமீபகாலமாக ஒவ்வொரு வார விடுமுறையிலும் வெளியூர் செல்லும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.