Rainfall: தமிழ்நாட்டில் பெய்த மழை இயல்பை விட குறைவு.. எங்கெங்கு என்னென்ன அளவு?
இதுவரை பெய்த மழையானது வழக்கத்தை விட குறைவாக பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையானது, டிசம்பர் மாதம் முழுவதும் பெய்யும். சில காலங்களில் சற்று தாமதமாக தொடங்கி, விரைவாகவும் முடிந்து விடும்.
மழை பெய்த அளவு:
இந்நிலையில் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பெய்த மழையை தெரிந்து கொள்வோம்.
தமிழ்நாட்டில் சராசரியாக, வடகிழக்கு பருவமழையானது, இதுநாள் வரை 39.86 செ.மீ மழை இயல்பாக பெய்யும். ஆனால், இந்த வருடத்தில் ஒரு சதவீதம் குறைந்து 39.35 செ.மீ மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில், அதிகபட்சமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் சராசரியாக, இதுநாள் வரையில் 85.59 செ.மீ மழை பெய்துள்ளது. இது, இயல்பை விட 12 செ.மீ அதிகமாக பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் குறைந்தபட்சமாக, திருச்சியில் இதுநாள் வரையில் 24.92 செ.மீ மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 27 சதவீதம் குறைவாகும்.
சென்னையில் சராசரியாக, இதுநாள் வரையில் இயல்பாக 73.19செ.மீ மழை இயல்பாக பெய்யும். ஆனால், இந்த வருடத்தில் 15 சதவீதம் அதிகமாக 84.08 செ.மீ மழை பெய்துள்ளது. மாண்டஸ் புயல் உள்ளிட்ட காரணங்களால் சென்னையில், இந்த வருடம் மழை சற்று அதிகம் பெய்துள்ளது.
தமிழ்நாட்டில், சராசரியாக வடகிழக்கு பருவமழையானது, அக்டோபர் 1 முதல் டிசம்பர் 11 ஆம் தேதி வரை இயல்பாக 39.86 செ.மீ மழை பெய்யும். ஆனால் இந்த வருடத்தில் 39.35 செ.மீ மழை பெய்துள்ளது. இது, இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாகும்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில், இந்த வருட பருவமழையானது, சற்று குறைவாக பெய்தாலும், மாண்டஸ் புயல், சில நாட்களுக்கு முன் வங்க கடலில் உருவாகிய காற்றழுத்தம் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை சற்று அதிகமாக பெய்துள்ளது.
Also Read: Chennai Rains: கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் மழை அளவு எவ்வளவு? நுங்கம்பாக்கத்தில் அதிகம்!