(Source: ECI/ABP News/ABP Majha)
TN Headlines Today: கெளரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு: அடுத்த 2 நாட்களுக்கு செம்ம வெயில் இருக்கு: தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வுகள்!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- கெளரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் சம்பள உயர்வு -அமைச்சர் பொன்முடி அதிரடி அறிவிப்பு
கெளரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்த அவர் தெரிவித்ததாவது:” 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. தமிழக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் தரத்தை உலக அளவில் உயர்த்துவதே எங்கள் இலக்கு. இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் படிக்க https://tamil.abplive.com/education/salary-increase-for-honorary-lecturers-from-20-thousand-to-25-thousand-rupees-minister-ponmudi-130228
- Minister Duraimurugan: காவிரி விவகாரம்; தஞ்சை தரணியில் பயிர்கள் காப்பாற்றப்படும்- அமைச்சர் துரைமுருகன்
காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை டெல்லியில் சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, முதலமைச்சர் கொடுத்த கடிதத்தை மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் கொடுத்து நிலைமையை எடுத்துக்கூறினேன். அவரும் இரண்டு ஒரு நாளில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அந்த நம்பிக்கையில்தான் இங்கு வந்துள்ளேன். எனது நம்பிக்கை பலன் கொடுக்குமானால், தஞ்சை தரணியில் பயிர்கள் காக்கப்படும் என தெரிவித்தார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/cauvery-issue-trip-to-delhi-if-it-pays-off-crops-will-be-saved-in-thanjavur-minister-duraimurugan-130217
- TN Weather Update: அடுத்த 2 நாட்களுக்கு செம்ம வெயில் இருக்கு.. வெப்ப அழுத்தம் எச்சரிக்கை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (21.07.2023) தெற்கு ஒரிசா - வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 21.07.2023 முதல் 27.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21.07.2023 மற்றும் 22.07.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/according-to-the-meteorological-department-the-temperature-in-tamil-nadu-will-be-2-to-4-degrees-celsius-above-normal-for-the-next-2-days-130220
- PTR Meets KTR: டிப்ஸ் கொடுத்த கேடிஆர்... பக்கா ப்ளான் போட்ட பிடிஆர்...! ஐடியில் கெத்து காட்டப்போகும் முன்னெடுப்புகள்!
- 15 Rameswaram Fishermen Released :ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்த இலங்கை அரசு...
ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை அரசு நிபந்தனைகளுடன் விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாளில் தமிழ்நாடு திரும்புவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதி பாலன் உத்தரவிட்டார். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த 9-ஆம் தேதி அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்கள் மீது இன்று மூன்று பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/15-rameswaram-fishermen-released-sri-lankan-government-released-them-with-conditions-130201