2000 Rupee Currency: டாஸ்மாக்கில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்காதீங்க - உத்தரவு போட்ட தமிழ்நாடு அரசு..!
2000 Rupee Currency: தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தலைப்புச் செய்தியாக மாறியுள்ள விஷயம் ரிசர்வ் வங்கி அறிவித்த 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது தான். இதனால் நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து அதிருத்திகள் கிளம்பியுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் டாஸ்மாக் நிர்வாகம் தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. மீறி வாங்கினால் கடை விற்பனையாளர் மற்றும் கடை மேற்பார்வையாளர் தான் பொறுப்பு என கூறப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் அதிகம் இல்லாமல் இருந்தது. இதற்கு முக்கிய காரணம், 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டதாக அறிவித்தது. ஆனாலும் அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் கூட அதிகம் புழக்கத்தில் இல்லாமல் இருந்தது. அந்த் நோட்டுகள் எல்லாம் பதுக்கப்பட்டிருக்கலாம் என ஊடகங்களில் அவ்வப்போது செய்திகள் வெளிவந்தன. தற்போது ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள இந்த அறிவிப்பால், இந்த பணம் மாற்றுவதற்காக வங்கிகளுக்கு வந்து சேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடுகளில் பதுக்கப்பட்டிருந்தால் அவற்றை மாற்ற அரசு நிர்வகிக்கும் டாஸ்மாக் கடைகளில் மாற்ற முயற்சிக்கலாம் என்பதால் அதனை தடுக்க தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் ரூபாய் 2 ஆயிரம் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும், மே 23ம் தேதி முதல் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.