மேலும் அறிய

Free Bicycle Scheme : பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! ஸ்டைலான இலவச சைக்கிள் - என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது கிடைக்கும்?

Free Bicycle Scheme : பள்ளி மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஸ்டைலான சைக்கிள் வழங்கும் திட்டம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இலவச சைக்கிளில் என்னென்ன சிறப்பம்சம் என்பதை தற்போது பார்க்கலாம்.

தமிழக அரசின் இலவச சைக்கிள் திட்டம்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் கல்வியை தடையின்றி தொடர செயும் வகையிலும், பள்ளிக்குச் செல்வதில் ஏற்படும் போக்குவரத்து சிரமங்களைக் குறைக்கவும் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள் தொலைதூரத்தில் உள்ள பள்ளிகளுக்குச் செல்வதற்கும், பொதுப் போக்குவரத்தைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் இந்தத் திட்டம் உதவுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக தவெக அரசு அமைந்துள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு புதிய வசதிகளோடு இலவச சைக்கிள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

5.32 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

அந்த வகையில் 2026–27ஆம் கல்வியாண்டில் சுமார் 5.32 லட்சம் மாணவர்களுக்கு ரூ.277 கோடி மதிப்பில் நவீன இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகளுக்கு தனி, தனி நிறத்தில் சைக்கிள் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களோடு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில்,  மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள சைக்கிள் நவீன வடிவமைப்புகளோடு வழங்க, அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, கடந்த ஆட்சியில் வழங்கப்பட்டதை விட எடை குறைவாகவும், ஸ்டாரங்காகவும்  சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

ஸ்டைலான சைக்கிள்- சிறப்பம்சம் என்ன.?

மேலும் பள்ளி மாணவர்கள் மாலை மற்றும் இரவு நேரத்திலும் பயன்படுத்தும் வகையில்,ஒளிரும் வகையில், முன்பகுதி மற்றும் பின்பகுதியில் பிரதிபலிப்பு 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட உள்ளது. இது மட்டுமில்லாமல் மேம்படுத்தப்பட்ட 'பிரேக் சிஸ்டம்' மற்றும் பைகளை எளிதாக எடுத்து செல்லும் வகை யில், பெரிய கேரியரும் பொருத்தப்பட உள்ளது. மேலும் தண்ணீர் பாட்டில், புத்தகம் வைப்பதற்கான வசதிகளும் சைக்கிளிலும் கூடுதலாக செய்யப்பட உள்ளன. அதோடு ஏற்கனவே மாணவர்கள், மாணவியருக்கு ஒரே நிறத்தில் சைக்கிள் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாணவர்களுக்கு ராணுவ பச்சை நிறத்திலும், மாணவியருக்கு வெளிர் ஊதா நிறத்திலும் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பரில் இலவச சைக்கிள்- முதலமைச்சர் விஜய் முடிவு

எனவே மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதம் தொடங்க, அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தர விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நவீன சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கான டெண்டர் கோரப்பட்ட நிலையில், நேற்றுடன் முடிந்த நிலையில் அக்டோபர் 13ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

" வீட்டிலிருந்து வெளியேறிய புகை " உள்ளே சென்று பார்த்த மகனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
விருதுநகர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர் வேலை: மாதம் ரூ.18,800 சம்பளம்!
விருதுநகர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர் வேலை: மாதம் ரூ.18,800 சம்பளம்!
மதுரை தனிஷ்க் கொள்ளை: பட்டதாரி இளைஞர் வீட்டில் 4 மணி நேர தீவிர விசாரணை!
மதுரை தனிஷ்க் கொள்ளை: பட்டதாரி இளைஞர் வீட்டில் 4 மணி நேர தீவிர விசாரணை!
"திருமணம் மீறிய உறவு" திடீரென பேசுவதை நிறுத்திய இளம்பெண் - வீடு புகுந்து இளைஞர் வெறிச் செயல்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போலி புத்தக ஊழல்: நூலகங்களில் திமுக மோசடி - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி குற்றச்சாட்டு!
போலி புத்தக ஊழல்: நூலகங்களில் திமுக மோசடி - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி குற்றச்சாட்டு!
திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்! பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து, ரயில் ஏற்பாடு!
திருச்செந்தூர் கந்தசஷ்டி சூரசம்ஹாரம்! பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து, ரயில் ஏற்பாடு!
சிங்கிள் சார்ஜில் 670 கி.மீ. ரேஞ்ச்.. உலகையே அதிர வைத்த புதிய எலெக்ட்ரிக் கார், சிறப்பம்சங்கள், விலை என்ன? முழு விவரம்
சிங்கிள் சார்ஜில் 670 கி.மீ. ரேஞ்ச்.. உலகையே அதிர வைத்த புதிய எலெக்ட்ரிக் கார், சிறப்பம்சங்கள், விலை என்ன? முழு விவரம்
ரூ.500 கோடி மிச்சம்! ECR மேம்பாலத் திட்டத்தில் தமிழக அரசின் புதிய முடிவு... என்ன நடக்கிறது?
ரூ.500 கோடி மிச்சம்! ECR மேம்பாலத் திட்டத்தில் தமிழக அரசின் புதிய முடிவு... என்ன நடக்கிறது?
ரசகுல்லா வடிவில் வந்த ராட்சசன்! - உயிரிழப்பை ஏற்படுத்திய கோரச்சம்பவம் பற்றி தெரியுமா?
ரசகுல்லா வடிவில் வந்த ராட்சசன்! - உயிரிழப்பை ஏற்படுத்திய கோரச்சம்பவம் பற்றி தெரியுமா?
‘சீனாவுக்கே டஃப் கொடுக்கும் சென்னை‘ - ஷாப்பிங் மால் உள்ளேயே புகுந்து செல்லும் மெட்ரோ ரயில் - எங்கே தெரியுமா?
‘சீனாவுக்கே டஃப் கொடுக்கும் சென்னை‘ - ஷாப்பிங் மால் உள்ளேயே புகுந்து செல்லும் மெட்ரோ ரயில் - எங்கே தெரியுமா?
கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து... 23 மாணவர்கள் உயிரிழப்பு.. பலர் கவலைக்கிடம்..
கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து... 23 மாணவர்கள் உயிரிழப்பு.. பலர் கவலைக்கிடம்..
முதுகலை பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! விழுப்புரம் மாவட்டத்தில் வேலை – தேர்வு விவரங்கள்!
முதுகலை பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! விழுப்புரம் மாவட்டத்தில் வேலை – தேர்வு விவரங்கள்!
Embed widget