Tamil Nadu Coronavirus Case: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரம் என்ற அளவில் பதிவாகியுள்ளது.
![Tamil Nadu Coronavirus Case: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன? Tamil Nadu Coronavirus: 27,936 new active cases with 478 death in last 24 hours in state Tamil Nadu Coronavirus Case: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/31/4beab33488764d9a313986d9b22435d4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தில் கடந்த வாரம் 36 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு, தளர்வில்லாத முழு ஊரடங்கு காரணமாக நேற்று 28 ஆயிரம் என்ற அளவில் பதிவாகியது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று 27 ஆயிரத்து 936 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 596 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்து 39 ஆயிரத்து 719 நபர்களாக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 4 ஆயிரத்து 502 ஆக பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 31 ஆயிரத்து 223 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 70 ஆயிரத்து 503 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று சென்னையைத் தவிர பிற 36 மாவட்டங்களில் 25 ஆயிரத்து 340 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது வரை சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 922 ஆகும். மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் ஆண்கள் மட்டும் 12 லட்சத்து 36 ஆயிரத்து 167 ஆகும். பெண்கள் மட்டும் 8 லட்சத்து 60 ஆயிரத்து 311 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 15 ஆயிரத்து 766 ஆகும். பெண்கள் 12 ஆயிரத்து 170 ஆகும். தமிழகத்தில் நேற்று புதிய உச்சமாக கொரோனா வைரசால் 493 நபர்கள் உயிரிழந்த நிலையில், இன்று சற்று குறைவாக ஒரே நாளில் 478 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 258 நபர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். 220 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 232 ஆக அதிகரித்து உள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் 7 ஆயிரத்து 91 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று உயிரிழந்தவர்களில் 108 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள் ஆவர். தமிழகத்தில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு தொடர்நது அதிகரித்து சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது தினசரி ஆயிரம் என்ற அளவில் குறைந்து வருவது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Coronavirus Cases India: இந்தியாவில் 2.56 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)