TN Corona LIVE Updates : காஞ்சிபுரத்தில் குறைந்துவரும் கொரோனா தொற்று பாதிப்பு : எழும் புது நம்பிக்கை!
தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
கடந்த கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் 34,285 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு 468 பேர் பலியாகியுள்ளனர். இது, தமிழகத்தில் பதிவிசெய்யப்பட்ட ஒரு நாள் அதிகபட்ச கொரோனா இறப்பு எண்ணிக்கையாகும்.
சுமார் 1.77 கோடி (1,77,67,850) தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் உள்ளன என்றும், அடுத்த மூன்று நாட்களில், மேலும் 7 லட்சம் தடுப்பூசி டோஸ்களை வழங்க உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் குறைந்துவரும் கொரோனா தொற்று பாதிப்பு : எழும் புது நம்பிக்கை!
பாதிப்பு குறைந்து வருவதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவமனைப் படுக்கைகள் காலியாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொற்று பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல்
தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் வேண்டாம் - மு.க ஸ்டாலின் வேண்டுகோள்
மக்கள் அனைவரும் தயக்கமின்றி கோவிட்-19 க்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்
இழப்பீட்டு நிதி 10 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் - மு.க ஸ்டாலின் அறிவிப்பு
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், கொரோனா தொற்றால் உயிரிழக்க நேர்ந்தால், அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டு நிதி 10 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்
மதியம் 12 மணி வரை 42,687 பேருக்கு தடுப்பூசி
தமிழகத்தில், இன்று மதியம் 12 மணி வரை 42,687 பேருக்கு தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னை, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, மதுரை ஆகிய மாவட்டங்களில் தடுப்பு மருந்து வழங்கலின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது
செங்கல்பட்டு பாரத்பயோடெக் தடுப்பூசி ஆலையை தமிழக அரசே நடத்த வேண்டும்
செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனம் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.