Karunanidhi Memorial: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!
நினைவு தினத்தை முன்னிட்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான மு.கருணாநிதியின் 3ஆவது நினைவு தினம் தமிழ்நாடும் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பல இடங்களில் கருணாநிதியின் உருவப்படம் வைக்கப்பட்டு அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. கட்சியின் சார்பாக அந்தந்த பகுதிகளில் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
’அண்ணாவின் இதயத்தை இரவலாய் பெற்றவன்’ - ஈடில்லா கருணாநிதி... நினைவுதினம்!
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், எம்பிக்கள், திருவல்லிகேனி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள். இதேபோல், மறைந்த முதலமைச்சர் அண்ணா நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நம் நெஞ்சங்களில் நிறைந்து நம்மை இயக்கும் தலைவர் கலைஞரின் நினைவுநாள்! தலைவரை - தமிழன்னையின் தலைமகனை நாம் பிரிந்து மூன்றாண்டுகள் ஆகின்றது. அவரது சொற்களும் எண்ணங்களும் நம் திசைமானி; அவர் காட்டிய வழி நடப்போம்! சமத்துவ சமுதாயம் அமைப்போம்!’ எனப்பதிவிட்டுள்ளார்.
நம் நெஞ்சங்களில் நிறைந்து நம்மை இயக்கும் தலைவர் கலைஞரின் நினைவுநாள்!
— M.K.Stalin (@mkstalin) August 7, 2021
தலைவரை - தமிழன்னையின் தலைமகனை நாம் பிரிந்து மூன்றாண்டுகள் ஆகின்றது.
அவரது சொற்களும் எண்ணங்களும் நம் திசைமானி; அவர் காட்டிய வழி நடப்போம்! சமத்துவ சமுதாயம் அமைப்போம்!#என்றென்றும்கலைஞர்#RememberingKalaignar pic.twitter.com/5dEZOSVczC
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகள்:
காலை 8 மணி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களுடன் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல்
8.30 மணி: கோபாலபுரம் இல்லத்தில் மரியாதை செலுத்துதல்
8.45 மணி: சி.ஐ.டி காலனி இல்லத்தில் மரியாதை செலுத்துதல்
9.00 மணி: முரசொலி அலுவலகம்
9.15 மணி: அண்ணா அறிவாலயத்தில் சிலைக்கு மரியாதை செலுத்துதல்
9.30-10.00 மணி: தலைமைச்செயலகம் வருகை.
நம் நெஞ்சங்களில் இருந்து நம்மை வழிநடத்தும் முத்தமிழறிஞர் கலைஞரின் மூன்றாம் புகழ்வணக்க நாளில், பெரும் விழாக்கள், அலங்காரங்களைத் தவிர்த்து இல்லங்களில் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்திடுவோம்!
— M.K.Stalin (@mkstalin) August 5, 2021
அவர் வழியில் பயணித்துத் தமிழ்நாட்டை மாண்புறச் செய்வோம்!#LetterToBrethren pic.twitter.com/Cxz1lwfEgr
முன்னதாக, கொரோனா தொற்றால் வீட்டு வாசலிலேயே கருணாநிதியின் உருவப் படம் வைத்து அஞ்சலி செலுத்துமாறு தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற