மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

கர்நாடக முதல்வரை, முதல்வர் ஸ்டாலின் நட்பு ரீதியில் நேரில் சந்தித்து தண்ணீர் கேட்கவேண்டும் - அன்புமணி ராமதாஸ்

தமிழக முதல்வர் சிறப்பு கவனம் கொடுத்து தரவுகளை சேகரித்து உடனடியாக வன்னியர்களுக்கு 10.5% சதவீதம் முதல் தவணையாக சட்டம் கொண்டு வர வேண்டும்.

காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வரை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நட்பு ரீதியில் நேரில் சந்தித்து தண்ணீர் கேட்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள மருத்துவர் ராமதாஸ் இல்லத்தில் தந்த பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து திண்டிவனத்தில், 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கூறிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்:

”கடந்த ஆட்சி காலத்தில் பல போராட்டங்கள் மற்றும் அழுத்தங்கள் மூலம் 10.5% இட ஒதுக்கீடு பெற்று தரப்பட்டது ஆனால் நீதிமன்றத்தின் மூலம் அது ரத்து செய்தது. அதே நேரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தரவுகள் மூலம் நியாயப்படுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பு வந்து ஒன்றரை ஆண்டு காலம் ஆன நிலையில் தமிழக அரசு தரவுகளை சேகரித்துக் கொண்டிருக்கிறது என்பது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தமிழக முதல்வர் சிறப்பு கவனம் கொடுத்து இந்த தரவுகளை சேகரித்து உடனடியாக வன்னியர்களுக்கு 10.5% சதவீதம் முதல் தவணையாக சட்டம் கொண்டு வர வேண்டும். இது சமூக நீதிப் பிரச்சனை. இதனை இன்னும் தாமதப்படுத்தினால் கடுமையான போராட்டங்கள் நடத்த தயங்க மாட்டோம்.

திமுக சமூக நீதி என்று பேசினால் போதாது அதனை செயல் வடிவத்தில் கொண்டு வர வேண்டும். இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம். நல்ல உடல் நலத்தோடு ஆரோக்கியத்தோடு நாட்டிற்கு சேவைகளை தொடர்ந்து செய்ய வேண்டுமென வாழ்த்துகிறோம். அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலையின் விமர்சனத்திற்கு குறித்த கேள்விக்கு அது குறித்து எனக்கு தெரியவில்லை என்றும் தெரிந்து பேசுவதாகவும்” கூறினார்.

”திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்து பெண்களுக்கும் கொடுப்பதாக கூறினார்கள் ஆனால் இன்று ஒரு கோடியே 6 லட்சம் பெண்களுக்கு மட்டுமே வழங்க வருகிறார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாமக நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்போம். தமிழக மீனவர்கள் இலங்கையால் பாதிக்கப்படுவது குறித்து நிரந்தர தீர்வு வர வேண்டும் தொடர்ந்து தமிழக அரசும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்து வருகிறோம். இந்தியா இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது அதன் அடிப்படையில் அழுத்தம் கொடுத்து இதனை தடுத்து நிறுத்த வேண்டும். 

தமிழ்நாட்டின் மிக முக்கிய பிரச்சனையாக இருப்பது காவிரி விவகாரம் கர்நாடகாவில் முதல்வரும், துணை முதல்வரும் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என சொல்லியுள்ளனர் இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை வாரிய தீர்ப்புக்கு பிறகும் எதையும் அவர்கள் ஏற்க மாட்டோம் எனக் கூறி வருகிறார்கள். இது இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது. இது சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாறும். கர்நாடகாவில் இது அரசியலுக்காகவும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இதனை தூண்டி விட்டு வருகிறார்கள். கர்நாடகாவில் இரண்டு அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது ஆனால் தமிழகத்தில் அப்படி கூட்டம் எதுவும் கூட்டப்படவில்லை.

அனைத்து கட்சிகளிடம் தமிழக அரசு யோசனை கேட்க வேண்டும். தமிழக அரசு காவிரி தொடர்பான வழக்கை மீண்டும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் மன நீதிமன்றத்தை அணுக வேண்டும். டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஆன நிலங்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. கர்நாடக எதையும் மதிக்காமல் நடந்து வருகிறது கர்நாடகா இந்தியாவில்தான் இருக்கிறதா அல்லது தனி நாடாக இருக்கிறதா என சந்தேகம் வந்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள அணைகள் மற்றும் மேட்டூர் அணைகளை மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னோட தனிப்பட்ட யோசனையாக பேச்சுவார்த்தையாக இல்லாமல் தமிழக முதல்வர் கர்நாடக முதல்வரை நட்பு பூரீதியில் சந்தித்து தண்ணீர் கேட்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

”தமிழகத்தின் சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு முழு காரணமும் மதுவும், கஞ்சாவும்தான். தந்தை பெரியார் மற்றும் அண்ணாவின் கொள்கை பூரண மதுவிலக்கு என்பது ஆனால் அவரை பின்பற்றும் திராவிட கட்சிகள் இதனை செயல்படுத்த முன்வருவதில்லை” என்றார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?
"CMஆன பிறகுதான் வருவேன்" ஜெயலலிதா பாணியில் சபதம்.. செய்து காட்டிய ஃபட்னாவிஸ்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
”CM ஆனா கண்டிப்பா இது நடக்கும்”: 4ஆம் வகுப்பு மாணவன் வைத்த கோரிக்கை - உறுதி கொடுத்த விஜய்!
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
ஆசிரியரின் காலை அழுத்தும் மாணவர்கள்... அதிர்ச்சி வீடியோவால் பாய்ந்த அதிரடி நடவடிக்கை
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
Jharkhand Election Result 2024: சல்லி, சல்லியாய் போன பா.ஜ.க.! ஜார்க்கண்டில் ஜாம் ஜாம் மோடில் ஹேமந்த் சோரன்!
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CBSE Scholarship: மாதந்தோறும் கல்வி உதவித்தொகை; சிபிஎஸ்இ அழைப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget