மேலும் அறிய

"தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்" தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல்!

சட்டப்பேரவை தொகுதிகளில் இருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாளை எடுத்து செல்லப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தகவல் தெரிவித்துள்ளார்.

Satyabrata Sahoo: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை மறுநாள் மக்களவை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தியா முழுவதும் 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் தொடங்குகிறது. அந்த வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

தேர்தலுக்கு தயாரான தமிழ்நாடு:

கடந்த 45 நாள்களாக அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வந்த சூறாவளி பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடம் நிறைவு பெற்றது. இந்த நிலையில், தேர்தலுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. அந்ததந்த சட்டப்பேரவை தொகுதிகளில் இருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாளை எடுத்து செல்லப்படும்.

தேர்தல் அதிகாரிகளும் அவர்களின் வாக்குச்சாவடிகளுக்கு நாளை மாலைக்குள் சென்றுவிடுவார்கள். பாதுகாப்பிற்காக காவல்துறை அதிகாரிகளும் சிஆர்பிஎப் அதிகாரிகளும் எங்கெங்கு செல்ல வேண்டும் என்பது தயாராக உள்ளது.

"சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஏற்பாடுகள்"

தமிழ்நாடு முழுவதும் 68,000 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதில், 55,000 வாக்குச்சாவடிகளில் இன்டர்நெட் வசதி நன்றாக உள்ளது. இம்மாதிரியான வாக்குச்சாவடிகளில் தொடர்ந்து கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் நீண்ட வரிசையில் நிற்காமல் வாக்களிக்க உதவ வேண்டும் என ஒவ்வொரு வாக்காளரையும் கேட்டு கொள்கிறேன். வாக்கு செலுத்துவது ஒவ்வொருவரின் உரிமை. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்" என்றார்.

தொடர்ந்து விரிவாக பேசிய சத்யபிரதா சாஹூ, "கிட்டத்தட்ட 90 சதவிகித வாக்குச்சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுவிட்டன. வாக்குச்சீட்டு கொடுக்கும்போது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் அதை பெற்று கொள்ளவில்லை என்றால் வாக்கு செலுத்த கூடாது என்ற கட்டாயம் இல்லை.

வாக்கு செலுத்த வாக்குச்சீட்டு அவசியமா?

தேர்தல் ஆணையம் சொன்ன 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும் வாக்கு செலுத்தலாம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நன்றாக உள்ளது. இருந்தபோதிலும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிஆர்பிஎப் வீரர்கள், கண்காணிப்பு கேமரா, தேர்தல் பார்வையாளர் என தயார் நிலையில் இருந்து, தகவல் கொடுப்பார்கள். புகார் கொடுக்க எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய வந்தவர்கள், அந்தந்த தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும்" என்றார்.

இதையும் படிக்க: அமேதியில் ஸ்மிருதி இரானிக்கு ஷாக் கொடுக்க காத்திருக்கும் காங்கிரஸ்.. ரகசியத்தை உடைத்த ராகுல் காந்தி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget