TN Budget 2021: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை தள்ளுபடி - நிதியமைச்சர் அறிவிப்பு
சில மாவட்டங்களில் இந்தத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே சந்தேகத்திற்கு இடமான வகையில் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன
தமிழக அரசின் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த முறை காகிதம் இல்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் துறைக்கென முதல் முறையாக தனி நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதனை அத்துறைக்கான அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
கூட்டுறவுக் கடன் தள்ளுபடி:
கூட்டுறவு வழங்கப்பட்ட கடன் சங்கங்களில் நகைக்கடன்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்வது இந்த அரசின் முன்னுரிமையாகும். முந்தைய அரசு,”- தேர்தலுக்கு முன்பாக பயிர்க்கடனைத் தள்ளுடி செய்வதாக அறிவித்தது. இத்திட்டத்தின் மொத்தச் செலவு 12110.74 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. முந்தைய அரசால் இந்த அரசின் மீது சுமத்ப்பட்ட மிகப் பெரிய நிதிச்சுமையாக இது அமைந்தது. இதற்காக 4,803.95 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதுபோன்ற இதர நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும்போதும் இதே நிகழ்வு பொருந்தும் என்பதால் அதுகுறித்து உரிய விசாரணைக்குப் பிறகு, தள்ளுபடி எடுக்கப்படும். அப்போதுதான் தவறு செய்பவர்கள் தவிர்க்கப்பட்டு, உண்மையான பயனாளிகள் பலன் அடைவர்.
கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்குவதற்கு ஏதுவாக, இச்சங்கங்களுக்கு பல்வேறு கட்டங்களில் நிதி வழங்குவதற்கான நடைமுறையை அரசு வகுக்கும். இதற்காக, 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்தில் குளறுபடி: பயிர்க்கடன் கடன் தள்ளுபடி செய்யும் திட்டத்தின் செயல்பாட்டை ஆராய்ந்தபோது பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ள உண்மை தெரிய வருகிறது. சில மாவட்டங்களில் இந்தத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே சந்தேகத்திற்கு இடமான வகையில் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
பயிர்க்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் தகுதியை ஆராய்ந்தபோது அடங்களில் குறிப்பிட்டுள்ள
பரப்பை விட கூடுதலாகவும், அடங்கலில் குறிப்பிடப்பட்டுள்ள பயிர் அல்லாமல் வேறு பயிரும், மேலும் அடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பயிருக்கு அனுமதிக்கப்பட்ட கடனை விட கூடுதலாகவும் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. விவசாய நகை கடன் அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தரம் மற்றும் தூய்மை சரியாக கணக்கிடப்படவில்லை. எனவே, இந்த முறைகேடுகளை தீர ஆராய்ந்து இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடர்: பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 16-ஆம் தேதி முதல் தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அதன்பிறகு மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் 21-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதிவரை நடைபெறும் என்று ஏற்கனவே தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்திருந்தார்.
மேலும், வாசிக்க:
TN Budget 2021: கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசு: பிடிஆர் பட்ஜெட் உரை!