இந்திய அளவில் மிக பெரிய தொலைக்காட்சி நிறுவனம்...ஏபிபி நாடுவுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து..!
"இன்னும் தெம்பாக வலிமையாக அடுத்த கட்ட பயணத்திற்கு நீங்கள் செல்வதற்கு இறை அருள் உங்களுக்கு இருக்கட்டும்"
இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமாக இருப்பது ஏபிபி நெட்வொர்க். அதன் தமிழ் செய்தி தளமான ஏபிபி நாடு இன்று மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதற்கு பல்வேறு தலைவர்கள், தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, பெரியவர்களே, உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கக்கூடிய ஏபிபி நாடு இந்திய அளவில் மிக பெரிய தொலைக்காட்சி நிறுவனமாக உள்ளது. தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. கடுமையாக வேலை செய்யக்கூடிய பணி செய்யக்கூடிய பத்திரிகை சகோதரர்கள் இதில் இருக்கிறார்கள்.
இந்த நேரத்தில், உங்களுக்கு இன்னும் தெம்பாக வலிமையாக அடுத்த கட்ட பயணத்திற்கு நீங்கள் செல்வதற்கு இறை அருள் உங்களுக்கு இருக்கட்டும் என பாஜக சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நன்றி. வணக்கம்" என்றார்.