மேலும் அறிய

Government Order: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் ஆஃபர்: சத்துணவில் சர்க்கரை பொங்கல் - அரசாணை வெளியீடு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி அனைத்து சத்துணவு மற்றும் குழந்தைகள் மையங்களிலும்  இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி அனைத்து சத்துணவு மற்றும் குழந்தைகள் மையங்களிலும்  இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாட வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

”தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் 17.04.2023 அன்று நடைபெற்ற பொழுது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் அவர்கள், சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ மாணவியர்களுக்கு முன்னாள் முதலமைச்சர்களின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளார்.

சத்துணவு/குழந்தைகள் மையங்களில் மாணவியர்களுக்கு நாள்தோறும் பயனடைந்து வரும் மாணவ, மாணவியர்களுக்கு, நாள்தோறும் சத்துணவிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள அரிசியின் அளவில் அரிசி பயன்படுத்தவும். இனிப்புப் பொங்கல் வழங்க தேவைப்படும் வெல்லம் மற்றம் இதர பொருட்களை இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் நாளின் உணவூட்டுச் செலவினத்திற்குள் (எரிபொருள் நீங்கலாக) வாங்குவதற்கு அனுமதி அளித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நாளான 03.06.2023 அன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து  சத்துணவு/குழந்தைகள் மையங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள 43,094 சத்துணவு மையங்களின் மூலம் 44.72 இலட்சம் மாணவ மாணவியர்களும் 54439 குழந்தைகள் மையங்களின் மூலம் 14.40 இலட்சம் குழந்தைகளும் இதன் மூலம் பயன் பெறுவர்”. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக வெளியின அறிவிப்பில், கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி,  கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனை திறக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. ஜூன் மாதம் 5ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தரும் திரெளபதி முர்மு கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார். மேலும், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி நூற்றாண்டு விழா தொடக்க விழாவிலும் கலந்து கொள்ள உள்ளார் திரௌபதி முர்மு.

மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு கலைஞர் நூலகம் என பெயர் சூட்டப்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ”கலைஞர் நூலகம் கீழ்தளம், தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட கட்டிடமாக 2 லட்சத்து 13 ஆயிரத்து 288 சதுர அடியில்  கட்டப்பட்டு வருகிறது. கடந்தாண்டு, ஜன. 11ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். நூலகத்தில் கீழ்தளத்தில் வாகனங்கள் நிறுத்தவும், தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி அமர்ந்து படிக்கும் வகையில் தேவையான புத்தகங்கள், இருக்கைகளும், 250 இருக்கைகள் வசதியுடன் கூடிய கலையரங்கமும் அமைக்கப்படுகிறது. முதல் தளத்தில், குழந்தைகள் நூலகம், வாசகர்கள் தினசரி, மாத, வார பத்திரிகைகளை வாசிப்பதற்கான வசதிகளும், 2வது தளத்தில் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதைகள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம்,  திரைப்படத்துறை தொடர்பான புத்தகங்கள் தனிப்பிரிவாக இடம் பெறுகிறது.

இத்துடன் கலைஞர் ஆய்வகமும் ஏற்படுத்தப்படுகிறது. இந்த அரங்கில் அவரின் 4 ஆயிரம் ஆய்வறிக்கை புத்தகங்கள் இடம்பெறுகிறது. போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்காக 30 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்படவுள்ளன. 3-வது தளத்தில் 63 ஆயிரம் புத்தகங்களுடன் தமிழ், இலக்கியப்பகுதி தளமாகவும், 4-வது தளத்தில் ஆங்கில நூல்கள் பகுதியாகவும், 5-வது தளத்தில் ஐம்பெரும் காப்பியங்கள், பதினெண்கீழ் கணக்கு உள்ளிட்ட அரிய வகை புத்தகங்களின் பகுதியாகவும் அமைக்கப்படுகிறது. 6-வது தளத்தில் திறந்தவெளி படிப்பகம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
கட்டிடத்தின் முழு வடிவிலான கட்டுமான பணிகள் நூறு சதவீதம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்தது. இதனைத்தொடர்ந்து, மின் விளக்குகள், ஏசி மிஷின், 6 மாடிகளுக்கு செல்ல நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் முடிந்தன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs MI LIVE Score: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்; பந்து வீச்சு தேர்வு!
KKR vs MI LIVE Score: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்; பந்து வீச்சு தேர்வு!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Premalatha Vijayakanth : ’’கேப்டன் உயிரோடு இருந்தால்..’’பத்ம விருதுடன் பிரேமலதா..உருக்கமான பேட்டிRahul Gandhi attacks BJP : BJP-க்கு புது விளக்கம்!  ராகுல் காந்தி நெத்தியடி! பரபரக்கும் ஆந்திராSelvaperunthagai on Annamalai : ”கச்சத்தீவு விவகாரம்.. வாய் திறங்க அ.மலை?” செல்வப்பெருந்தகை ஆவேசம்Ma Subramanian on NEET : நீட் தேர்வு குளறுபடி!மாசு புது விளக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs MI LIVE Score: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்; பந்து வீச்சு தேர்வு!
KKR vs MI LIVE Score: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்; பந்து வீச்சு தேர்வு!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
தேர்தலில் முறைகேடா? தேர்தல் ஆணையத்திற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா பரபர கடிதம்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
IPL 2024: சஞ்சீவ் கோயங்காவிற்கு பாடம் புகட்டிய தோனி மனைவி! தல சம்சாரம்னா சும்மாவா?
IPL 2024: சஞ்சீவ் கோயங்காவிற்கு பாடம் புகட்டிய தோனி மனைவி! தல சம்சாரம்னா சும்மாவா?
Vijayakanth Padma Bhushan: விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
Vijayakanth Padma Bhushan: விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
"B ஃபார் பாபு, J ஃபார் ஜெகன், P ஃபார் பவன்" ஆந்திரா பார்முலாவை கையில் எடுத்த ராகுல் காந்தி!
Embed widget