மேலும் அறிய

Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

 

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை பங்குனி உத்திர திருவிழா, ஓணம் போன்ற நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இவை தவிர தமிழ் மாதத்தின் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். இதனைத்தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். நடைதிறப்பையொட்டி அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.


Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு

15-ந் தேதி முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜை நடை பெறுகிறது. 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

19-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்.

தலைப்பு செய்திகள்

"காசியை விட புனிதம்" - ஆனால் சொட்டு நீர் இல்லை... மயிலாடுதுறை துலா கட்டத்தில் சோகமான ஆடி அமாவாசை!
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!
முடியப்போது ஆடி.. தாலி கட்ட ரெடியாகும் புது மாப்பிள்ளைங்க..! ஆவணி முதல் முகூர்த்தத்திற்கு வெயிட்டிங்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
Embed widget