மேலும் அறிய

Mettur Dam: மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு 1.25 லட்சம் கன அடியாக அதிகரிப்பு.

கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சம் கன அடிக்கும் மேல் காவிரி ஆற்றில் வந்து கொண்டுள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளமான 120 அடியை எட்டி உள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 91 ஆண்டுகளில் தற்போது 43 வது முறையாக 580 நாட்களுக்குப் பிறகு முழு கொள்ளளவை நேற்று மாலை எட்டியது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பியதால் அங்கிருந்து உபரி நீர் அதிகளவில் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்த 27-ந் தேதி, 71 வது முறையாக எட்டியது. 

Mettur Dam: மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு 1.25 லட்சம் கன அடியாக அதிகரிப்பு.

நீர் திறப்பு:

இதனிடையே கடந்த 28 ஆம் தேதி முதற்கட்டமாக டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரித்து தற்போது 21,500 கன அடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது. 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வினாடிக்கு 1,03,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணிக்கு வினாடிக்கு 81,500 கன அடி வீதமும், காலை 7 மணிக்கு ஒரு லட்சம் கன அடி வீதமும், காலை 8 மணிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 21 ஆயிரத்து 500 கன அடி வீதம் திறக்கப்பட உள்ளது. கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சம் கன அடிக்கும் மேல் காவிரி ஆற்றில் வந்து கொண்டுள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனம்:

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீரை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி திறந்து வைத்தார். சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலுள்ள பாசன நிலங்களுக்கு, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் 30.07.2024 முதல் 13.12.2024 வரை 137 நாட்களுக்கு, அணையின் நீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்கள் மூலம் மொத்தம் 45000 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது. இதில் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mettur Dam: மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு 1.25 லட்சம் கன அடியாக அதிகரிப்பு.

வெள்ள அபாய எச்சரிக்கை:

மேட்டூர் நகராட்சி சார்பில் உபரிநீர் வெளியேற்றப்படும் பகுதியில் உள்ள தங்கமாபுரிபட்டணம், பெரியார் நகர், தூக்கனாம்பட்டி, மாதையன்குட்டை உள்ளிட்ட கிராமங்களில் காவிரிக் கரையோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இதேபோன்று காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தமிழக நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து மேட்டூர் அணையின் உதவி செயற்பொறியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 11 டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிக்கையை அனுப்பி வைத்துள்ளனர். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Meerut Murder: கணவரை துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த மனைவி - காதலனுடன் குத்தாட்டம், வீடியோ வைரல்
Meerut Murder: கணவரை துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த மனைவி - காதலனுடன் குத்தாட்டம், வீடியோ வைரல்
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Meerut Murder: கணவரை துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த மனைவி - காதலனுடன் குத்தாட்டம், வீடியோ வைரல்
Meerut Murder: கணவரை துண்டுகளாக வெட்டி, சிமெண்ட் ட்ரம்மில் அடைத்த மனைவி - காதலனுடன் குத்தாட்டம், வீடியோ வைரல்
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
KKR vs RCB: இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா..! கொல்கத்தாவை சமாளிக்குமா பெங்களூரு? வருண் Vs கோலி
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025: முதல் போட்டிக்கே ஆபத்தா! கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு அலர்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்
IPL 2025: முதல் போட்டிக்கே ஆபத்தா! கொல்கத்தாவுக்கு ஆரஞ்சு அலர்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025: ஐபிஎல், எந்த குழுவில் எந்த அணி? யாருக்கு யாருடன் 2 போட்டிகள்? பரிசுத்தொகை? மைதானங்கள், கேப்டன்கள்
IPL 2025 Fan Parks: ஐபிஎல் ஃபேன் பார்க் - எங்கு, எப்போது? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் அமையும்? டிக்கெட் விலை
IPL 2025 Fan Parks: ஐபிஎல் ஃபேன் பார்க் - எங்கு, எப்போது? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் அமையும்? டிக்கெட் விலை
Embed widget