“ஏமாற்றம்தான்... ஆனால் இது முடிவு அல்ல” - வன்னியர் உள் ஒதுக்கீடு தீர்ப்பில் அன்புமணியின் ரியாக்ஷன்
இந்த சட்டத்தை தேர்தல் காரணங்களுக்காக அவசர அவசரமாக கொண்டு வரவில்லை. இதற்காக நாங்கள் பல ஆண்டுகாலமாக போராடி வருகிறோம்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இந்த தீர்ப்பால் வன்னியர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் 69% சதவீதம் ஒதுக்கீட்டீற்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சமூகத்துக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், இதற்காக ஜனாதிபதியின் ஒப்புதல் தேவையில்லை எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இது சாதகமான அம்சமாகும். பாதகமான விஷயம் என்னவென்றால், வன்னியர்களின் சமூகநிலையின் புள்ளிவிவரங்கள் இல்லை என்று தீர்ப்பில் கூறியது. இது முடிவு கிடையாது, தொடக்கம்தான். தமிழ்நாடு உடனடியாக ஒரு ஆணையத்தை அமைத்து வன்னியர்களின் பின் தங்கிய புள்ளி விவரங்களை சேகரித்து, சட்டசபையில் மீண்டும் ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், இந்த சட்டத்தை தேர்தல் காரணங்களுக்காக அவசர அவசரமாக கொண்டு வரவில்லை. இதற்காக நாங்கள் பல ஆண்டுகாலமாக போராடி வருகிறோம். இந்த சட்டத்திற்காக நூற்றுக்கணக்கானோர் போராடி உயிரிழந்துள்ளனர் என்று கூறினார்.
10.5% இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பணி மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்ந்தவர்களின் நியமனங்கள் செல்லும் என உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அவர்கள் பாதுகாக்கப்பட்டு தொடர்ந்து வேலையிலும் படிப்பிலும் தொடரலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த வழக்கின் தீர்ப்பிற்கு பின்னர் வன்னியர் இட ஒதுக்கீட்டில் கல்வி அல்லது வேலை வாய்ப்பில் இடம் வழங்கிய உத்தரவுகள் குறித்து சில வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியபோது, சட்டமே ரத்தாகிவிட்டதால் அதன்மூலம் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளும் ரத்தாகிவிடும் என நீதிபதிகள் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியானது.
#BREAKING | உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது; ஆனால் இது முடிவல்ல - அன்புமணி ராமதாஸ் https://t.co/wupaoCQKa2 | #VanniyarReservation #SupremeCourt #TNGovt pic.twitter.com/FTxfZbXKDa
— ABP Nadu (@abpnadu) March 31, 2022
10.5% இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பணி / கல்வி நிறுவனங்களில் சேர்ந்தவர்களின் நியமனங்கள் செல்லும் என உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
— ABP Nadu (@abpnadu) March 31, 2022
அவர்கள் பாதுகாக்கப்பட்டு, தொடர்ந்து வேலையிலும் படிப்பிலும் தொடரலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது
-அன்புமணி ராமதாஸ்#VanniyarReservation pic.twitter.com/QZdeOg2V29
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்