மேலும் அறிய

தடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் டெண்டர் - தமிழக அரசு நடவடிக்கை..

18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்தவேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்திற்கு சுமார் 13 இலட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், தமிழக அரசு தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது "கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒன்றிய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்திற்கு சுமார் 13 இலட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தடுப்பூசி இறக்குமதி செய்ய உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் டெண்டர் - தமிழக அரசு நடவடிக்கை..

இந்த ஒதுக்கீடு, 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, குறுகிய காலத்திற்குள் 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு முனைப்புடன் எடுக்கும்.

உயர்த்தி வழங்கிட வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். அந்த வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 280 டன்னிலிருந்து 419 டன்னாக உயர்த்தப்பட்டுள்ள போதிலும், இன்னும் கூடுதலாக ஆக்சிஜன் தமிழகத்திற்குத் தேவைப்படுகிறது. எனவே, போதிய ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை உடனடியாக அமைத்திடவும், பிற மாநிலங்களில் உள்ள எஃகு உற்பத்தி தொழிற்சாலைகளிலிருந்து தமிழகத்திற்கு இரயில்கள் மூலமாக ஆக்சிஜனை கொண்டு வருவதற்கும், அவ்வாறு பெறப்படும் ஆக்சிஜனை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு சீராக விநியோகம் செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுத்திடுமாறு தொழில் துறைக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரவிட்டார்கள்." என தெரிவிக்கப்பட்டுள்ளது

தலைப்பு செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்! - புதுச்சேரி - கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: முழு விவரம் உள்ளே...
வாகன ஓட்டிகளே உஷார்! - புதுச்சேரி - கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: முழு விவரம் உள்ளே...
நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்கள்: கூட்ட நெரிசலுக்கு தீர்வு! முன்பதிவு இன்று முதல்!
நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்கள்: கூட்ட நெரிசலுக்கு தீர்வு! முன்பதிவு இன்று முதல்!
Udhayanidhi Stalin: உதயநிதியின் ஆணவம்.. திமுகவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையை பேசுறதே வேலை.. தமிழிசை அட்டாக்!
Udhayanidhi Stalin: உதயநிதியின் ஆணவம்.. திமுகவுக்கு தனிப்பட்ட வாழ்க்கையை பேசுறதே வேலை.. தமிழிசை அட்டாக்!
திடீர் வருகை... திகைப்பில் அரசியல் களம்! – ஆகஸ்ட் 8-ல் தமிழகம், புதுச்சேரிக்கு வருகிறார் அமித் ஷா!
திடீர் வருகை... திகைப்பில் அரசியல் களம்! – ஆகஸ்ட் 8-ல் தமிழகம், புதுச்சேரிக்கு வருகிறார் அமித் ஷா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget