Southern Railway Announcement: பீகார், உத்தர பிரதேச பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் தற்காலிகமாக ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
Southern Railway Announcement:பீகார் மற்றும் கிழக்கு உத்திரபிரதேச மாநில பகுதிகளுக்கு செல்லும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னி பத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட இந்திய மாநிலங்களில் ரயிலை எரித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தெற்கு ரயில்வே அதிகார வரம்பில் இருந்து வட இந்தியாவிற்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.,
பீகார் மற்றும் கிழக்கு உத்திரபிரதேச மாநில பகுதிகளுக்கு செல்லும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயில் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்:
இரயில் எண் | புறப்படும் இடம்- சேரும் இடம் | ரத்து செய்யப்பட்டுள்ள தேதி |
17230 | SC-TVC Express- செகந்திரபாத்- திருவனந்தபுரம் விரைவு இரயில் | 17.06.2022 |
22644 | PNBE-ERS Express- பாட்னா- எர்னாகுளம் விரைவு இரயில் | 17.06.2022 |
12295 | SBC-DNR Express- SAHIBGANJ JN (SBG) To DANAPUR (DNR) சங்கமித்ரா விரைவு இரயில் | 17.06.2022 (partially Cancelled பெரம்பூர்- DARBHANGA வழித்தடத்தில் ) |
12578 | MYS-DBG Express(மைசூர் -DARBHANGA ) பாக்மதி விரைவு ரயில் | 17.06.2022 |
மேலே குறிப்பிட்டுள்ள இரயில்கள் அனைத்தும் பீகார், உத்தர பிரதேச மாநிலங்களில் உள்ள பகுதிகளுக்கு செல்வதால் அபாயத்தை தடுக்கும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
The train mentioned in the notification - 22644 Patna-Ernakulam express, departing from Patna, now stands cancelled due to violent protests in the jurisdiction of East Central Railway. We regret the inconvenience caused. #AgnipathProtests pic.twitter.com/yHWlNg3xh8
— DRM Chennai (@DrmChennai) June 17, 2022
இரயில் எண் | இரயில் பெயர் | தேதி | வழி மாற்றம் |
15630 | SHTT-TBM Express | 17.06.2022 | KYQ-GLPT-NBQ |
12507 | TVC-SCL Express | 14.04.2022 | NBQ-GLPT-KYQ |
12508 | SCL-TVC Express | 17.04.2022 | KYQ-GLPT-NBQ |
தெற்கு ரயில்வே சில வட இந்தியாவிற்கு செல்லும் சில ரயில்களின் வழித்தடத் தை மாற்றியுள்ளது. வண்டி எண 15630 அசாமில் உள்ள சிலாகித் நகர் முதல் தாம்பரம் வரை செல்லும் (SHTT-TBM EXP) விரைவு ரயில் 17.06.2022 அன்று (KYQ)KAMAKHYA to (GLPT)GOALPARA TOWN New Bongaigaon Junction NBQ (KYQ-GLPT-NBQ) வழியாக செல்லும்.
வண்டி எண் 12507 திருவனந்தபுரம்- சிலிசார் விரைவு ரயில் (TVC-SCL Express) 14.04.2022 அன்று வழக்கமாக செல்லும் தடமான (NBQ-RNY-KYQ) என்பதற்கு பதிலாக (NBQ-GLPT-KYQ) வழியாக செல்லும்.
வண்டி எண 12508 சிலிசார்-திருவனந்தபுரம்- விரைவு இரயில் (SCL-TVC Express) 17.04.2022 அன்று KYQ-GLPT-NBQ என்ற வழித்தடத்தில் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
📢Passengers kindly note:
— South Western Railway (@SWRRLY) June 17, 2022
Replacement of train's rake from conventional to LHB(Linke Hofmann Busch) and Rescheduling/Regulation of trains services.#SWRupdates#TrainUpdates
.@Central_Railway .@DrmChennai https://t.co/I72XDccbi5 pic.twitter.com/OEh0yw20K8
இரயில் வழித்தட விவரம்:
NBQ- New Bongaigaon Junction
GLPT-GOALPARA TOWN
KYQ- KAMAKHYA
RNY-Rangiya Junction
We would like to inform everyone that it is still an evolving situation and we are closely assessing the feasibility of running certain affected train services. We would request everyone to be patient, wait for the announcements at the stations and follow the handle for updates.
— DRM Chennai (@DrmChennai) June 17, 2022
பயணிகள் தொடர்ந்து தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியாகும் தகவல்கள் தெரிந்து கொண்டு பயண திட்டங்களை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இரயில்கள் ரத்து - இயக்கம் குறித்து தகவல்களுக்கு தொடர்ந்து டிவிட்டரில் வரும் தகவல்களை பின்பற்றுமாறூம் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.