மேலும் அறிய

Crime: சொத்தை எழுதி வாங்கியதும் தந்தையை கொடுமைப்படுத்திய மகன்..! கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

கன்னியாகுமரி அருகே படுத்த படுக்கையாக இருக்கும் தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்து ஆவணத்தை சப்-கலெக்டர் ரத்து செய்தார்.

கன்னியாகுமரி அருகே படுத்த படுக்கையாக இருக்கும் தந்தையை துன்புறுத்திய மகனின் சொத்து ஆவணத்தை சப்-கலெக்டர் ரத்து செய்தார்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்:

மண்டைக்காடு அருகே உள்ள அழகன்பாறை பகுதியை சேர்ந்தவர் ஜான் தாமஸ். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரின் மனைவி தவசி கனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகள் சென்னையிலும் மகன் கோவையிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு  ஜான் தாமஸ் பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். அப்போது  ஜான் தாமஸ் தன்னுடைய பெயரில் இருந்த வீடுடன் கூடிய 1 ஏக்கர் 37 சென்ட் இடத்தை அவருடைய மகனுக்கு எழுதி கொடுத்து விட்டார்.

ஜான் தாமசை அவரின் மனைவி தவசி கனியம்மாள் கவனித்து வந்த நிலையில்,  கடந்த ஆண்டு தவசி கனியம்மாள் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து தந்தையை கவனிக்க அவருடைய மகன் பணியாளர் ஒருவரை நியமித்தார். தந்தையின் ஓய்வூதிய பணத்தையும் பெற்று அதிலிருந்து அந்த பணியாளருக்கு சம்பளம் வழங்கினார். 

தந்தையுடன் தகராறு:

மகன் கோவையில் இருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் தந்தையுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தட்டி கேட்ட பணியாளரையும் தாக்க முயற்சித்துள்ளார். இதனை அறிந்த ஜான்தாமசின் மகள் சென்னையில் இருந்து வீட்டுக்கு வந்து பணியாளரை சமாதானம் செய்தார். இதனையடுத்தும் படுத்த படுக்கையில் உள்ள தந்தை என்றும் எண்ணாமல், அவரை அவரது மகன் துன்புறுத்தியதாக தெரிகிறது.

கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி அன்று பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு தீர்ப்பாயத்தில் மகன் தன்னை பராமரிக்காமல் துன்புறுத்தி வருவதாக தன் மகன் ஜான் தாமஸ் புகார் அளித்தார். இதனை பரிசீலனை செய்த தீர்ப்பாயத்தின் நடுவரும், சப்-கலெக்டருமான கவுசிக் இருதரப்பினரையும் கடந்த மாதம் 6-ஆம் தேதி விசாரணைக்கு அழைத்தார். இதில் ஜான் தாமஸ் படுக்கையாக இருப்பதால் அவர் தரப்பில் அவரது மகளும், எதிர்தரப்பில் மகனும் விசாரணைக்கு ஆஜராகினர்.

சொத்து ஆவணம் ரத்து:

அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டன. அழகன் பாறையில் உள்ள வீட்டில் படுக்கையாக இருந்த ஜான் தாமசை நேரில் சந்தித்து அவரிடமும் சப்-கலெக்டர் கவுசிக் விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் முடிவில்,  மகன், தந்தையை துன்புறுத்தியதும், அவரை பராமரிக்க தவறியதும்  தெரியவந்தது. இதனை அடுத்து 2017-ஆம் ஆண்டு மணவாளக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஜான் தாமஸ் தன்னுடைய மகன் பெயருக்கு எழுதி கொடுத்த வீடுடன் கூடிய 1 ஏக்கர் 37 சென்ட்டுக்கான சொத்து ஆவணத்தை ரத்து செய்து சப்-கலெக்டர் கவுசிக் உத்தரவு பிறப்பித்தார்.  சப்-கலெக்டர் கவுசிக்  நேற்று இந்த உத்தரவை நேரடியாக சென்று ஜான் தாமஸிடம் வழங்கினார்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Embed widget