மேலும் அறிய
ஸ்மார்ட் மீட்டர் திட்டம்: 1.43 கோடி நுகர்வோருக்கு விரைவில்! மின் கட்டணத்தில் மாற்றம் - ராதாகிருஷ்ணன் தகவல்
மாதாந்திர மின் கட்டண முறைக்கு ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் திறக்!கப்பட்டு 1.43 கோடி நுகர்வோருக்கு விரைவில் தயாராக வேண்டும்.

மின்பகிர்மான இயக்குனர் ராதாகிருஷ்ணன்
Source : ABP NADU
விழுப்புரம்: மாதாந்திர மின் கட்டண முறைக்கு ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் திறக்கப்பட்டு 1.43 கோடி நுகர்வோருக்கு விரைவில் தயாராக வேண்டும். இதற்கு 21 மாதங்கள் ஆகும் ஒட்டுமொத்த நுகர்வோர் தமிழகத்தில் 3.46 கோடி பேர் உள்ளதால் கொள்ளை முடிவுகள் அடிப்படையில் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமென மின்பகிர்மான இயக்குனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையில் உள்ள மின்பொறியாளர் அலுவலகத்தில் தமிழக கூடுதல் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநருமான ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின் பேட்டியளித்த அவர், பருவ மழையை முன்னிட்டு பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு மின் துறை தயார் நிலையில் இருக்க முதல்வர் வலியுறுத்தி உள்ளதால் கள ஆய்வுகளில் மின் ஒயர், மின்கம்பம், டிரான்ஸ் பார்மர் தயார் நிலையில், இருக்கவும் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் பார்த்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்,
பருவமழையின் போது பொதுமக்கள் புகார் அளிக்கும் போது உடனடியாக நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் இருப்பதோடு மருத்துவமனையில் ஜெனரேட்டர் தயார் நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறினார். தமிழக மின் துறையில் பருவ மழையை எதிர்கொள்ள 3.32 லட்சம் மின்கம்பங்கள், 1.62 லட்சம் பைப் லைன், 10,647 டிராண்ஸ்பார்மர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், 186 டிவிஷனில் 5081 பேர் பணியில் இருக்க உத்தரவிடப் பட்டுள்ளதாகவும், 38 மாவட்டங்களுக்கும் 45 கண்காணிப்பு மைய அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ளதாக கூறினார்.
அடிக்கடி மின்சார துடிப்பு இல்லாமல் இருக்க ரியாக்ஷன் டைமினை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மின் துண்டிப்பு எதனால் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து மக்களுக்கு தெரியபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மாதாந்திர மின் கட்டண முறைக்கு ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் திறக்கப்பட்டு 1.43 கோடி நுகர்வோருக்கு விரைவில் தயாராக வேண்டும் இதற்கு 21 மாதங்கள் ஆகும் ஒட்டுமொத்த நுகர்வோர் தமிழகத்தில் 3.46 கோடி பேர் உள்ளதால் கொள்ளை முடிவுகள் அடிப்படையில் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
மொபைல் போன்கள்
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















