மேலும் அறிய

SINGARA CHENNAI 2.0: அடேங்கப்பா...! சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் இவ்வுளவு பணிகள் நடைபெற போகிறதா...!

’’சென்னை மாநகரை மேம்படுத்த 500 கோடி செலவில் சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படுகிறது’’

Singara Chennai 2.0 Project: உலகின் பழமை வாய்ந்த மாநகராட்சியாக விளங்கும் மெட்ராஸ் மாநகரம் 1996 ஆம் ஆண்டில் சென்னை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1996 ஆம் ஆண்டு  நடைபெற்ற சென்னை மேயர் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார் மு.க.ஸ்டாலின். அப்போது உருவாக்கப்பட்டது தான் சிங்காரச் சென்னை திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் பாலங்கள் கட்டுதல், பூங்காக்களை உருவாக்குதல், கடற்கரைகளை அழகுபடுத்துதல், சாலைகளை விரிவாக்கம் செய்தல், போக்குவரத்து வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட எண்ணற்ற பணிகள் நடைபெற்றுவந்தன. சென்னையில் இருக்கும் சில முக்கிய மேம்பாலங்கள் ஸ்டாலின் மேயராக இருந்தபோது கொண்டு வரப்பட்டவையே. திமுக ஆட்சி காலங்களில் சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்துவது வழக்கம் அந்த அடிப்படையில்தான் தற்போது இத்திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. 

SINGARA CHENNAI 2.0: அடேங்கப்பா...! சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் இவ்வுளவு பணிகள் நடைபெற போகிறதா...!

திமுக ஆட்சி பொறுப்பேற்று நடைபெற்ற முதல் கூட்டத்தொடரின் ஆளுநர் உரையிலேயே சிங்காரச் சென்னை திட்டம் அறிவிக்கப்பட்டது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது 2021-22 ஆம் ஆண்டுக்கான பணிகளுக்காக 500 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இதற்கான அரசாணையும் உடனடியாக தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில், சிங்காரச் சென்னை 2.0 திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கவும், பணிகளை கண்காணிக்கவும், தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளரின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் இத்திட்டப் பணிகளுக்கான தொடர்பு அமைப்பாகச் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் என்ன பணிகளெல்லாம் செய்யவிருக்கிறார்கள்?

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பசுமை சென்னை, கலாச்சாரம் மிகு சென்னை, தூய்மை சென்னை, நீர்மிகு சென்னை, எழில்மிகு சென்னை, நலம்மிகு சென்னை, கல்விமிகு சென்னை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என கூறப்பட்டு உள்ளது.

பசுமை சென்னை:

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் மாசு மற்றும் வெப்பத்தை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை சென்னை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் சென்னையின் பசுமை பரப்பை விரிவுபடுத்தப்படுத்தும் வகையில் நீர் நிலைகளில் பசுமை பூங்காக்கள் அமைத்தல், மேம்பாலங்களின் கீழ் பூங்கா, செடி வளர்ப்பு உள்ளிட்டவைகள் ஏற்படுத்தப்படும், மியாவாக்கி காடுகள் மூலம் வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகளில் தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தூய்மைமிகு சென்னை:

தூய்மைமிகு சென்னை திட்டத்தின் கீழ் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள பழைய குப்பை கழிவுகளை உயிரியல் அகழ்ந்தெடுத்தல் முறையில் நீக்கி நிலத்தை பசுமை நிலமாக மீட்டெடுத்தல். கட்டுமானம் மற்றும் இடிப்பாட்டு கழிவுகளை சேகரித்து விஞ்ஞான முறையில் மறு சுழற்சி செய்தல்.  குடிசைப் பகுதிகளில் தேங்கும் அதிகப்படியான குப்பை கழிவுகளை அகற்றுதல், இறைச்சி கூடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் நவீன மயமாக்குதல், சென்னை மாநகரை குப்பை இல்லாத மாநகராய் மாற்றுதல், சுவரொட்டிகள் இல்லாத சென்னையாக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

எழில்மிகு சென்னை:

எழில்மிகு சென்னை திட்டத்தின் கீழ் சென்னையை அழகான நகராக மாற்றும் வகையில் சாலைகளை சீரமைத்தல், போக்குவரத்தை கையாளுதல், பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஐஐடி மேம்பாலம், கத்திப்பாரா மேம்பாலம், கோயம்பேடு மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாலங்களின் கீழ் உள்ள இடங்களை அழகுபடுத்துதல். போஸ்டர்கள் இல்லாத நகராக சென்னையை மாற்றுதல், பழமையான கட்டிடங்களுக்கு விளக்குகள் அமைத்தல், பாலங்களை விளக்குகளால் அலங்கரித்தல், கட்டிட கழிவுகளை முறையாக சேகரித்து அகற்றுதல், சந்தைகள், பொது இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

SINGARA CHENNAI 2.0: அடேங்கப்பா...! சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் இவ்வுளவு பணிகள் நடைபெற போகிறதா...!

கலாச்சாரம் மிகு சென்னை:

கலாச்சாரம் மிகு சென்னை திட்டத்தின் கீழ் சென்னை தினம் மற்றும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்துதல் புராதன இடங்கள் சீரமைப்பு, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் சுவர்களில் ஓவியங்கள் உள்ளிட்டவைகள் செயல்படுத்தப்பட இருக்கின்றன.

நீர்மிகு சென்னை: 

நீர்மிகு சென்னை திட்டத்தின் கீழ் 25 நீர் நிலைகளை சுத்தம் செய்தல், நிலத்தடி நீரை மேம்படுத்துதல், வடிகால்களை மேம்படுத்துதல், கழிவு நீர்சுத்திகரிப்பு, மழைநீர் மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

கல்விமிகு சென்னை:

கல்விமிகு சென்னை திட்டத்தின் கீழ் மாநகராட்சிப் பள்ளிகளை தரம் உயர்த்துதல், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை உருவாக்குதல், உயர்கல்விக்கு உதவுதல், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், படிப்பதற்கு வீட்டில் போதுமான இடம் இல்லாத பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான கற்றல் மையங்களை ஏற்படுத்துதல், நவீன நூலகங்கள் அமைத்தல், அடிப்படை அறிவியல், தொழிற்கல்வி, தொழில்நுட்பம், கணிதம் உள்ளிட்டவைகளை மாணவர்கள் கற்கும் வகையில் பூங்கா உருவாக்கப்படும்.

நலம் மிகு சென்னை:

நலம்மிகு சென்னை திட்டத்தின் கீழ் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல், பொது கழிவறைகளை அமைத்தல், விலங்குகளுக்கான PET PARK உருவாக்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகளை ஏற்படுத்துதல், விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைத்து ஒவ்வொரு வீட்டையும் கழிவுநீர் அமைப்புடன் இணைத்தல், மோட்டார் அல்லாத வாகனப் போக்குவரத்து ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ப்ராஜக்ட் ப்ளூ:

ப்ராஜக்ட் ப்ளூ திட்டத்தின் கீழ் 21 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடற்கரைகளை மேம்படுத்துதல், நீர் விளையாட்டுகளுக்கான இடங்களை அமைத்தல், மாற்றுத்திறனாளிகளும் கடற்கரைகளை பயன்படுத்தும் வகையில் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், வாக்கிங், ஜாக்கிங் செல்பவர்களுக்கான பிரத்யேக பாதைகளை உருவாக்குதல், நீருக்கடியில் அக்வாரியம் உருவாக்குதல் உள்ளிட்டபணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. 

SINGARA CHENNAI 2.0: அடேங்கப்பா...! சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் இவ்வுளவு பணிகள் நடைபெற போகிறதா...!

சுற்றுலா மேம்பாடு:

சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் ராட்சத ராட்டினங்களை உள்ளடக்கிய பூங்காக்களை உருவாக்குதல், கடற்கரை சாலைகளை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலம் சுற்றுலாவை ஊக்குவிக்க பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இவைகள் மட்டுமல்லாது போக்குவரத்து பயன்பாடு, மக்களின் பயணங்களை எளிதாக்குதல், மக்கள் மாநகராட்சியை எளிதாக அணுகுதல், E-governance என பல்வேறு வகையாக பணிகளை உள்ளடக்கி சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் BiharAllu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan Kalyan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்
Half Yearly Leave: அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு? தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்
Half Yearly Leave: அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு? தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 60 லட்சம் பேர், கொடுத்ததோ வெறும் 10,701 பேருக்கு! துரோகம் செய்ததா திமுக?
Embed widget